பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி: 16 போட்டியாளர்கள் இவர்களா? புதிய லிஸ்ட்..!

  • IndiaGlitz, [Tuesday,October 01 2024]

விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 6ஆம் தேதி பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கான தகவல்கள் அவ்வப்போது கசிந்து வந்தன. தற்போது, இறுதி கட்டமாக, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் 16 போட்டியாளர்களின் தகவல் இணையத்தில் கசிந்து வருகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த தர்ஷிகா, காமெடி நடிகர் டி.எஸ். கே, நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன், கோகுல்நாத், சீரியல் நடிகர் விஜே விஷால், காமெடி நடிகர் விடிவி கணேஷ், பாடகி பால் தபா, மாடல் அழகி மற்றும் நடிகை சௌந்தர்யா நஞ்சுண்டன், தொலைக்காட்சி சீரியல் நடிகை தர்ஷா குப்தா, சீரியல் நடிகை மற்றும் டான்சர் சுனிதா, மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி மகளாக நடித்த சஞ்சனா, மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அன்ஷிதா, அர்னவ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த பட்டியல் எந்த அளவுக்கு உண்மை என்பதை நிகழ்ச்சி தொடங்கும் நாளில் தெரிந்து கொள்ளலாம்.