'சொம்பு தூக்கி' விருது பெற்ற பெண் போட்டியாளர்.. கண்ணீர் விட்டு அழுததால் பரபரப்பு..!

  • IndiaGlitz, [Friday,October 18 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் காமெடியான விருதுகள் வழங்கப்படும் நிலையில், இந்த சீசனிலும் அனைத்து போட்டியாளர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.

அந்த வகையில், சொம்பு தூக்கி என்ற விருது பெண் போட்டியாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட நிலையில், அவர் கண்ணீர் விட்டு அழுத காட்சி இன்றைய ப்ரோமோ வீடியோவில் உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது ப்ரொமோ வீடியோவில் அனைத்து போட்டியாளர்களுக்கும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காமெடியாக வழங்கப்படும் இந்த விருதில், பவித்ராவுக்கு ஆடியன்ஸ் வாட்சிங் என்ற விருது வழங்கப்பட்டது. இதே விருது ஜெப்ரிக்கு வழங்கப்பட்டபோது, நான் வாங்கும் முதல் விருது என நெகிழ்ச்சியுடன் பெற்று கொண்டார்.

மேலும் ஜாக்லினுக்கு டம்மி பாவா என்ற விருது, அதே விருது முத்துக்குமரனுக்கும் வழங்கப்பட்டது. தர்ஷாவுக்கு டிராமா குயின் என்ற விருது, அன்சிதாவுக்கு சொம்பு தூக்கி என்ற விருதும் வழங்கப்பட்டது. சொம்பு தூக்கி விருதை அர்னவ் மூலம் பெற்றுக் கொண்ட அன்ஷிதா, அதன்பின் தனியாக சென்று கண்ணீர் வடித்து அழுத காட்சிகளுடன், இன்றைய புரமோ வீடியோ முடிவுக்கு வருகிறது.

இன்னும் ஆற்ற போட்டிகளுக்கு என்னென்ன விருதுகள் வழங்கப்பட்டு உள்ளது என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

More News

'சூர்யா 45' ஒரு சாமி படமா? கதையை மாற்றிய ஆர்.ஜே. பாலாஜி?

சூர்யா நடிக்க இருக்கும் 45வது திரைப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த படம் ஒரு சாமி படம் என்று செய்தி வெளியாகியுள்ளது, பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

'சம்பவம் வெயிட்டிங்'.. வீர தீர சூரன்' பட அப்டேட்டை தெரிவித்த பிரபலம்..!

விக்ரம் நடித்து வரும் 'வீர தீர சூரன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் அப்டேட் குறித்த தகவலை தெரிவித்த தயாரிப்பாளர் "விரைவில் சம்பவம் வெயிட்டிங்"

ராஷ்மிகா மந்தனாவுக்கு புதிய பதவி: நியமன அறிவிப்பை வெளியிட்ட மத்திய உள்துறை அமைச்சகம்..!

நடிகை ராஷ்மிகா மந்தனா முக்கிய பதவியில் நியமனம் செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகை கர்ப்பம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

'கபாலி' என்ற திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகை ராதிகா ஆப்தே, கர்ப்பமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை  தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ரம்யா பாண்டியனுக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?  ரிஷிகேஷில் திருமண ஏற்பாடு..!

நடிகை ரம்யா பாண்டியன் யோகா மாஸ்டரை திருமணம் செய்ய இருப்பதாகவும், இவர்களின் திருமணம் ரிஷிகேஷில், கங்கை நதி அருகே நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.