முன்கூட்டியே தொடங்கப்படுகிறதா பிக்பாஸ் தமிழ் சீசன் 7? கமல்ஹாசன் தொகுத்து வழங்குவாரா?

  • IndiaGlitz, [Thursday,May 04 2023]

பிக்பாஸ் தமிழ் இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில் 7வது சீசன் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறு சீசன்களில் ஆரவ், ரித்விகா, முகின், ஆரி, ராஜு ஜெயமோகன் மற்றும் அசிம் ஆகிய ஆறு பேர் டைட்டில் வின்னர்களாக வெற்றி பெற்றுள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் முடிந்தது.

இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதால் வழக்கம் போல் ஜூன் மாதத்தில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் இறுதியில் அல்லது ஜூலையில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தேர்வு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆறு சீசன்களை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வந்த நிலையில் ஏழாவது சீசனையும் அவர் தொகுத்து வழங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் உள்ளது. ஆனால் கமல்ஹாசன் தற்போது ’இந்தியன் 2’ படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இந்த படத்தை முடித்தவுடன் அவர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் படம் உட்பட மூன்று படங்களில் கமிட்டாகி இருப்பதால் அவர் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா? அல்லது அவருக்கு பதிலாக வேறு யாரேனும் தொகுத்து வழங்குவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர்' ரிலீஸ் தேதி.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் 'ஜெயிலர்' படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் அந்த மாஸ் அறிவிப்பு வெளியாகி

'லால் சலாம்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே? விஷ்ணு விஷால் கொடுத்த மாஸ் தகவல்..!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் 'லால் சலாம்' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலை அருகே நடைபெற்றது

ஆன்மீக நகரில் பிறந்த நாளை கொண்டாடிய த்ரிஷா .. க்யூட் புகைப்படங்கள்..!

நடிகை த்ரிஷா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

'மாவீரன்' ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்? இதுதான் காரணமா?

சிவகார்த்திகேயன் நடித்து வரும் இரண்டு திரைப்படங்களின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அவற்றில் ஒன்றான 'மாவீரன்' ரிலீஸ் தேதி மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்

தமிழ்த் திரையுலகில் அடுத்த சோகம்… பிரபல நடன இயக்குநர் சம்பத்ராஜ் உயிரிழப்பு!

நடிகர், இயக்குநர் மனோபாலா இறந்த சோகத்தில் இருந்தே பலரும் மீளமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும்போது