நான் எதுவுமே பாக்கலைங்க... விஷ்ணு பாத்ரூம் மேட்டர் குறித்து வெட்கத்துடன் பூர்ணிமா..

  • IndiaGlitz, [Tuesday,October 24 2023]

தான் பாத்ரூமில் குளிக்கும் போது திடீரென பூர்ணிமா கதவை திறந்ததாக விஷ்ணு குற்றச்சாட்டு கூற, அதற்கு ’நான் எதுவுமே பாக்கலைங்க’ என்று பூர்ணிமா கூறும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

‘முதல் மரியாதை’ படத்தில் வரும் ’எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்’ என்ற வசனத்தை போலவே ’எனக்கு ஒரு அநியாயம் நடந்துருச்சு’ என்று பூர்ணிமாவிடம் விஷ்ணு கூறுகிறார்.

நான் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்கும் போது நீங்கள் எப்படி கதவை திறக்கலாம்? என்று அவர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு பூரணிமா ’பாத்ரூம் கதவு உள்பக்கமாக பூட்டவில்லை, திறந்துதான் இருந்தது, நான் உள்ளே யாரும் இல்லை என்று நினைத்து தான் திறந்தேன்’ என்று கூறுகிறார்

’அது எப்படி, நான் வெளியில் செருப்பு கழட்டி வைத்திருந்தேனே, நான் ஷாம்பு போட்டு குளித்துக் கொண்டிருக்கும் போது எப்படி நீங்கள் உள்ளே வந்து வரலாம் என்று விஷ்ணு கூறுகிறார். அப்போது வெட்கப்பட்டு கொண்டே பூர்ணிமா ’நான் எதுவுமே பார்க்கலைங்க’ என்று கூற ’எனக்கு ஒரு அநியாயம் நடந்து விட்டது என்று திரும்ப திரும்ப கூறும் விஷ்ணு ’மாயாவிடம் இதையெல்லாம் நீங்கள் தட்டிக் கேட்க மாட்டீங்களா, என்று திரும்பத் திரும்ப கூறினார்.

அதற்கு மாயா, ’பேசாம போங்க, அவங்க தான் எதுவும் பார்க்கலைன்னு சொல்றாங்கல்ல.. என்று கூறியதோடு, ’இதை போய் தட்டிக் கேட்க முடியுமா’ என்று காமெடியாக கூறும் காட்சியும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மொத்தத்தில் விஷ்ணுவின் பாத்ரூம் மேட்டர் பிக்பாஸ் வீட்டில் ஒரு கலகலப்பை ஏற்படுத்தி உள்ளது.