ஜோவிகாவின் 'போடா வாடா' உட்பட பல பஞ்சாயத்து.. கமல்ஹாசன் முடிவு என்ன? புரமோ வீடியோ..!

  • IndiaGlitz, [Saturday,October 14 2023]

பிக்பாஸ் வீடு இந்த வாரம் ரணகளமாக இருந்தது என்பதும், குறிப்பாக ஸ்மால் ஹவுஸ் மற்றும் பிக் ஹவுஸ் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து இரு துருவங்களாக மோதிக்கொண்டனர் என்பதும் அதனால் பிக் பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதையும் பார்த்தோம்.

குறிப்பாக பிரதீப் அந்தோணியை ஜோவிகா ’போடா வாடா’ என்று கூறியது, ’என்னை பார்த்து தகுதி இல்லை என்று எப்படி கூறலாம்' என பிரதீப் அந்தோணியை பார்த்து நிக்சன் கூறியது, மாயா - விசித்ரா இடையிலான பிரச்சனை உட்பட பல பிரச்சினைகள் இருப்பதால் இன்று கமல்ஹாசனுக்கு இந்த பஞ்சாயத்துக்களை தீர்க்கவே நேரம் சரியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் சுலபத்தில் தீர்வு கண்டுவிடும் கமல்ஹாசன் இன்றைய நிகழ்ச்சியிலும் சிலருக்கு கண்டனத்தையும் சிலருக்கு வாழ்த்துக்களையும் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்கள் ஸ்ட்ரைக் செய்ததை கமல் எப்படி அணுகப் போகிறார் என்பதை பார்க்க பார்வையாளர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர். மொத்தத்தில் இரண்டாவது வாரமே பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்துள்ளதால் பார்வையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியே.