பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் இவர் தான்.. .ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கிடைத்த உறுதியான தகவல்..!

  • IndiaGlitz, [Saturday,January 13 2024]

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் நாளைய நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் யார் என்பது தெரியவரும். இறுதி போட்டியாளர்களாக அர்ச்சனா, மணி, தினேஷ், மாயா மற்றும் விஷ்ணு ஆகியோர் இருக்கும் நிலையில் இவர்களில் ஒருவர் தான் டைட்டில் வின்னர் என்று கூறப்பட்டது. நேற்று இரவு டைட்டில் வின்னர் யார் என்பதை முடிவு செய்யும் வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில் தற்போது டைட்டில் வின்னருக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து நமக்கு கிடைத்த உறுதி செய்யப்பட்ட தகவலின்படி பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா என்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே அர்ச்சனாவுக்கு சுமார் 40 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குகள் கிடைத்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது இந்த தகவலையும் சேர்த்து பார்க்கும் போது அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே வைல்டு கார்டு போட்டியாளராக வந்து டைட்டில் வின்னர் பட்டம் பெறும் முதல் போட்டியாளர் அர்ச்சனா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் இருந்தே அர்ச்சனாவுக்கு பார்வையாளர்களின் ஆதரவு இருந்து வந்தது என்பது குறிப்பாக பிரதீப் வெளியேற்றத்துக்கு கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்கள் காரணமாக இருந்த நிலையில் அர்ச்சனா மட்டும்தான் பிரதீப் வெளியேற்றத்திற்கு எதிராக இருந்தார் என்பதும் அப்போது முதல் அவர் மீது பார்வையாளர்களுக்கு ஒரு ஈர்ப்பு வந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பே அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் என்பதை பார்வையாளர்கள் மட்டுமின்றி சக போட்டியாளர்களுமே உணர்ந்து உள்ள நிலையில் தற்போது அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.