எதிர்பாராத ட்விஸ்ட்.. இந்த வாரம் எலிமினேஷன் இந்த போட்டியாளரா?

  • IndiaGlitz, [Saturday,November 18 2023]

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேசன் செய்யப்பட்ட போட்டியாளர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் எலிமினேஷன் செய்யப்படுவார் என்பது தெரிந்தது.

இதுவரை அனன்யா, பாவா செல்லதுரை, விஜய், யுகேந்திரன், வினுஷா, அன்னபாரதி, ஐஷு ஆகியோர் எலிமினேஷன் செய்யப்பட்டனர் என்பதும் பிரதீப் வெளியேற்றப்பட்டார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த வாரம் விக்ரம், மணி சந்திரா, பிராவோ, பூர்ணிமா, விசித்ரா, அக்சயா, கானா பாலா மற்றும் ரவீனா ஆகியோர் நாமினேசன் செய்யப்பட்டு இருந்த நிலையில் இவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றதாக பாலா எலிமினேஷன் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்த வாரம் பூர்ணிமா வெளியேற்றப்படுவார் என்று பார்வையாளர்கள் கணித்திருந்த நிலையில் பாலா வெளியேற்றப்பட்டு இருப்பது எதிர்பாராத ட்விஸ்டை ஏற்படுத்தியுள்ளது.