மாயா குரூப்பில் இருந்த முக்கிய போட்டியாளர் எலிமினேஷன்.. பிக்பாஸ் வீட்டில் எதிர்பாராத திருப்பம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேறுவார் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்ட அர்ச்சனா, பிராவோ, தினேஷ், விசித்ரா ஐஷு, பூர்ணிமா ஆகியவர்களில் குறைந்த வாக்குகள் பெற்று எலிமினேஷன் செய்யப்பட்டவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே குறிப்பாக பிரதீப் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்ற பின்னர் மாயா மற்றும் பூர்ணிமா இணைந்து சக போட்டி யாளர்களுக்கு தொல்லைகள் கொடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக கேப்டன் என்ற ஆணவத்தில் அர்ச்சனா மற்றும் விசித்ராவை மாயா கடுப்பேற்றி வருகின்றார் என்பதை பார்த்து வருகிறோம். தினேஷையும் அவ்வப்போது சீண்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி நாமினேஷன் சிக்கி இருந்த போட்டியாளர்களில் ஒருவரான பூர்ணிமா எலிமினேஷன் செய்யப்பட்டதாக தெரிகிறது. மாயா மற்றும் பூர்ணிமா ஆகியோர் இணைந்து செய்த அட்டகாசங்களுக்கு பார்வையாளர்கள் முடிவு கட்டிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது. இதனை அடுத்து மாயா இனி என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நேற்றுதான் பூர்ணிமா தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பொருளாதார ரீதியில் கொஞ்சம் பலம் கிடைக்கும், வெளியில் கொஞ்சம் நல்ல பெயர் கிடைக்கும், அதை வைத்து வாய்ப்புகள் பெற்று விடலாம் என்று நினைத்தேன். ஆனால் போகிற போக்கை பார்த்தால் இருக்கிற பெயர் கெட்டுப் போய்விடும் போல தெரிகிறது, இந்த வாரம் நான் வெளியே போனால் கூட எனக்கு நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தார். அவரது விருப்பப்படி அவரை பார்வையாளர்கள் எலிமினேஷன் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments