'பிக்பாஸ் சீசன் 7' தொடங்குவது இந்த தேதியிலா? 3 மாதம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் இதுவரை 6 சீசன் முடிவடைந்துள்ளன என்பதும் 6 சீசன்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு மிகப்பெரிய புகழ் மற்றும் பணம் கிடைப்பது மட்டுமின்றி திரையுலகிலும் வாய்ப்பு கிடைக்கிறது என்பதால் இதில் கலந்து கொள்ள தற்போது பிரபலங்கள் போட்டி போட்டு வருகின்றனர்.
உலகநாயகன் கமல்ஹாசன் 7வது சீசனையும் தொகுத்து வழங்க இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் புரோமோ படப்பிடிப்பையும் அவர் முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பிக்பாஸ் 7வது சீசனில் கலந்து கொள்வதற்காக போட்டியாளர்களின் ஆடிஷன் நடைபெற்று வருவதாகவும் இதுவரை எதிர்பார்க்காத போட்டியாளர்கள் இந்த சீசனில் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது கசிந்துள்ள தகவலின்படி அக்டோபர் 8ஆம் தேதி பிக்பாஸ் சீசன் 7 தொடங்கும் என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் விஜய் டிவி அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டால் அடுத்த மூன்று மாதங்களுக்கு ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com