சண்டையும் ரெண்டு..சந்தோஷமும் ரெண்டு.. பிக்பாஸ் தமிழ் தொடங்கும் தேதி இதுவா?

  • IndiaGlitz, [Saturday,September 09 2023]

விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் 7வது சீசன் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கும் தேதி குறித்த தகவல் கசிந்து உள்ளது.

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது 7 வது சீசனுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த புரமோ வீடியோ வெளியானது. அதில் இரண்டு வீடுகள் என்றால் சண்டைகளும் இரண்டு இருக்குமோ என்று ஒரு கமல்ஹாசன் கூற, அதற்கு இன்னொரு கமலஹாசன் ஏன் சந்தோஷமும் இரண்டு இருக்கலாமே? என்று தெரிவித்தார். இந்த புரமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7வது சீசன் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் செப்டம்பர் இறுதி வாரத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த சீசனில் விஜய் டிவியின் ஐந்து பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்றும் மீதம் உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிளாமர் நடிகை கிரண் களமிறங்கியது போலவே தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு கிளாமர் நடிகை கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

மொத்தத்தில் ஆறு சீசன்கள் போலவே இந்த ஏழாவது சீசனும் பார்வையாளர்களுக்கு செம எண்டர்டெயின்மெண்ட் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

முதல் நாளில் உலக சாதனை செய்த 'ஜவான்' வசூல்.. திரையுலக வரலாற்றில் மிகப்பெரிய ஓப்பனிங்..!

ஷாருக்கானின் 'ஜவான்' வெளியான முதல் நாளில் 129.6 கோடி ரூபாய் வசூலித்து உலக அளவில் சாதனை படைத்திருக்கிறது!

'டங்கமாரி' ஸ்டைலில் ஒரு தர லோக்கல் குத்துப்பாட்டு.. தனுஷ் அடுத்த படத்தில் சம்பவம் செய்யும் ஏஆர் ரஹ்மான்..!

தனுஷின் அடுத்த திரைப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகவும் இந்த படத்தில் 'டங்கமாரி' பாடல் போன்ற ஒரு தர லோக்கல் குத்து பாட்டு இடம்பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தாமதமாகும் 'இந்தியன் 2' ரிலீஸ்.. முந்துகிறது ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன் படங்கள்..!

 உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கியுள்ள 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

'தளபதி 68' பூஜை, படப்பிடிப்பு எப்போது? மாஸ் தகவல்..!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள  'லியோ' திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் ஆன 'தளபதி 68' படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை

வெளியீட்டிற்கு முன்னரே முன்பதிவில் மிகப்பெரும் சாதனை செய்த 'லியோ'..!

இங்கிலாந்தில் தளபதி விஜய்யின் "லியோ" திரைப்படம் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் மூலம் வெளியீட்டிற்கு முன்னரே மிகப்பெரும் சாதனை படைத்துள்ளது.