'மாயா, எவ்வளவு கல்லு வச்சிருக்கிங்க.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கேள்வி..

  • IndiaGlitz, [Saturday,October 21 2023]

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 20வது நாளாக நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு தங்களை முன்னிலைப்படுத்த முயன்று வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் எபிசோடு என்பதால் கூடுதலாக சுவாரசியமா இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சற்று முன் கமல்ஹாசன் தோன்றும் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் கமல்ஹாசன் ’இந்த வீட்டில் இன்னார் எனக்கு தடை என்று சொல்பவர்கள், இந்த கல்லை அவர்களுக்கு கொடுக்கலாம் என்று கூறுகிறார்.

அப்போது பிரதீப், விசித்ரா மேடம் தான் எனக்கு தடையாக இருக்கிறார்கள், அவருக்கு இந்த கல்லை கொடுக்கிறேன்’ என்று கூறுகிறார். பதிலுக்கு விசித்ரா ’என்னோட வளர்ச்சிக்கு தடையாக இருப்பது உறுதியாக பிரதீப் தான், எனவே அவருக்கு இந்த கல்லை கொடுக்கிறேன், நான்தான் அவருடைய டார்க்கர் பாயிண்ட்களை கண்டுபிடித்து வெளியே சொல்லி வருகிறேன் என்று கூறுகிறார்.

இதனை அடுத்து மணி மாயாவுக்கு கொடுப்பதாக கூறி அவர் மிகவும் டிஸ்கரேஜ் செய்கிறார் என்று குற்றஞ்சாட்டினார். அதன் பிறகு விஷ்ணு விசித்ராவுக்கு கொடுக்க, கூல் சுரேஷ், ரவீனா ஆகியோர் மாயாவுக்கு கொடுக்கிறார்கள். எனவே மாயாவுக்கு தான் அதிக கல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து ’மாயா உங்களிடம் எவ்வளவு கல் இருக்கிறது என்று கமல்ஹாசன் கேட்பதுடன் இன்றைய புரோமோ வீடியோ முடிவுக்கு வருகிறது. இன்றைய நிகழ்ச்சியில் இது குறித்து கமலஹாசன் என்ன சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'தளபதி 68' படத்தை அடுத்து இன்னொரு பிரபல நடிகருடன் பிரியங்கா மோகன்..

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பிரியங்கா மோகன், அந்த படத்தின் வெற்றி காரணமாக பல படங்களில் நடித்து வருகிறார்

ரம்யா பாண்டியனின் நவராத்திரி போட்டோஷூட்.. வைரல் புகைப்படங்கள்..!

நவராத்திரி திருவிழா தற்போது நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நவராத்திரி பூஜை குறித்த பல திரையுலக பிரபலங்கள் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்

விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' சூப்பர் அப்டேட் கொடுத்த கெளதம் மேனன்.. ரசிகர்கள் குஷி..!

விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளை

இயக்குனர் ஹரி வீட்டில் நடந்த துக்க நிகழ்வு.. திரையுலகினர் இரங்கல்..!

இயக்குனர் ஹரி வீட்டில் நிகழ்ந்த துக்க நிகழ்வுக்கு திரையுலகினர் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

'கைதி 2' படத்தை அடுத்து இன்னொரு சூப்பர் ஹிட் இரண்டாம் பாகம்.. கார்த்தி அறிவிப்பு..!

 கார்த்தி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.