'கல்யாணம் ஆயிருச்சா' என்று கேட்ட விசித்ரா.. ஆமாம் 4 தடவை ஆயிருச்சுன்னு கலாய்த்த மாயா.. பிக்பாஸ் 11 வது நாள்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் விசித்ரா செமையாக விளையாடினார். முதலில் ரவீனா மற்றும் மணி ரொமான்ஸாக பேசிக் கொண்டிருந்தபோது அவர்களிடம் ‘ நீங்கள் மிகவும் க்யூட் ஆனா ஜோடியாக இருக்கிறீர்கள் என்று கூற, நாங்கள் காதல் ஜோடியே இல்லை நண்பர்கள்தான் என்று மணி-ரவீனா கூற, ஆமாம் நீங்கள் நண்பர்களே நான் நம்புகிறேன் என்று கிண்டலுடன் கூறிவிட்டு அதன் பிறகு அவர் பிரதீப் இடம் ரவீனா -மணி காதல் குறித்து கூறுகிறார். உடனே அவர் கிட்டத்தட்ட பிக் பாஸ் வீடு முழுவதும் இந்த காதலை தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்
மேலும் நேற்றைய நிகழ்ச்சியில் மணி - பிரவீனா காதல் குறித்து ஐஷுவும் தனது பங்கிற்கு செல்லக்கோபம் அடைந்தார். என்னிடம் உங்கள் காதலை பற்றி சொல்லவே இல்லையே என்ற ஐஷு கூற ’நான் ஏன் உன்னிடம் சொல்ல வேண்டும்’ என்று ரவீனா திருப்பி கேட்க, ’மணி எனக்கு நல்ல பிரண்டு, அவன் என்ன செய்தாலும் என்னிடம் சொல்லிவிடுவார்’ என்று கூற, ஒரே களேபரமாக இருந்தது.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக விசித்ரா ’கிட்சன் சுத்தமாக இல்லை என்றும் ஐஷு உன்னிடம் நான் என்ன சொல்லி இருக்கிறேன், கிச்சனை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன் அல்லவா என்று கேட்டார். இதனை அடுத்து மாயாவிடம் ’ஏன் உருளைக்கிழங்கை தோல் சீவாமல் போடுகிறாய், உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா என்று கேட்க, ஆமாம் 4 தடவை ஆயிடுச்சு என்று மாயா கலாய்க்கிறார். இப்படி தோல் சீவாமல் போட்டால் 4 தடவை தான் ஆகும் என விசித்ரா அவரை திருப்பி கலாய்க்க, அதன்பின் சரண்டராகி ‘சும்மா கண்டெட்டுக்கு சொன்னேன்’ என்று சமாளிக்கிறார். ஆனால் மாயா விடுவாரா? விஷ்ணுவிடம் அவரை கேலி செய்து பேசினார்.
இதனை அடுத்து விஷ்ணு மற்றும் யுகேந்திரனுக்கும் இடையே ஒரு சின்ன வாக்குவாதம் வர, அந்த வாக்குவாதத்தில் யுகேந்திரன் புத்திசாலித்தனமாக பின் வாங்கிக் கொண்டு தன்னுடைய பெயரை டேமேஜ் ஆகாமல் காப்பாற்றிக் கொண்டார்
இந்த நிலையில் அக்ஷயா திடீரென தனக்கு தோசையில் ஆயில் இல்லாமல் வேண்டும், தனக்கு அல்சர் என்று சொல்ல, பிரதீப் அதெல்லாம் முடியாது, எல்லோருக்கும் செய்வது மாதிரி தான் சுட்டுக் கொடுப்போம் என்று முகத்தில் அடித்தால் போல் கூறிவிட்டார்.
இதை யுகேந்திரன் ஒரு பிரச்சனையாக மாற்றினார், அப்போது ஜோதிகாவும் நேற்று கூட நாங்கள் கேட்டது ஒன்று, அவர்கள் கொடுத்தது ஒன்று என தூண்டி விட மொத்தத்தில் மீண்டும் ஒரு பிரச்சனை எழுந்து ஓய்ந்தது.
இந்த நிலையில் தான் பிக் ஹவுஸில் உள்ள போட்டியாளர்களை கலாய்த்து ஸ்மால் ஹவுசில் உள்ளவர்கள் ஒரு பாட்டு பாட அதில் மணி - ரவீனாவின் காதலும் ஒரு லைனாக இருந்தது. ஆனால் மணி அதை சீரியஸாக எடுத்து கொள்ளாமல் அந்த பாடலுக்கு டான்ஸ் ஆடி சமாளித்தார்.
இந்த நிலையில் தான் திடீரென ஸ்மால் ஹவுஸ் உள்ளவர்கள் ஸ்ட்ரைக் பண்ண ஆரம்பித்தார்கள். சமையல் செய்ய மாட்டோம் என போர்க்கொடி தூக்க, பிக் ஹஸில் உள்ளவர்களுக்கு பசி எடுக்க, இரு தரப்பினருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் நடந்தது.
இந்த நிலையில் தான் நேற்று சாப்பாடு குறித்து வாக்குவாதம் வந்தபோது திடீரென ஜோவிகா, பிரதீப்பை போடா வாடா என்று பேசினார். ஆனால் விசித்ரா அந்த இடத்தில் புத்திசாலித்தனமாக ’ஜோவிகாவை கண்டித்தால் என்ன நடக்கும் என்று தெரிந்து கொண்டு, பிரதீப் இடம் நீ மரியாதையாக பேச வேண்டும் என்று கூறினார். அந்த வார்த்தையை அவர் பிரதீப் இடம் சொன்னாலும் அது மறைமுகமாக ஜோவிகாவுக்கு சொன்னதாக தான் கருதப்பட்டது. ஜோவிகா அதை புரிந்து கொண்டாரா என தெரியவில்லை, அமைதியாக இருந்தார்.
மொத்தத்தில் பிக் ஹவுஸ் மற்றும் ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்களின் சண்டையை பார்த்த கேப்டன் விக்ரம், ஏன் தான் இந்த வாரம் நான் கேப்டன் ஆனேன் என்று நொந்து கொண்டதுடன் நேற்றைய எபிசோட் முடிந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com