தமிழ் திரையுலகில் ஹீரோவாகும் பிக்பாஸ் சீசன் 7 பிரபலம்.. குவியும் வாழ்த்துக்கள்..!
- IndiaGlitz, [Tuesday,April 09 2024]
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ஒருவர் தற்போது தமிழ் திரையுலகின் ஹீரோவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் விஷ்ணு என்பதும் இவர் இந்த நிகழ்ச்சியில் நான்காவது இடத்தை பெற்றார் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் விஷ்ணு ஏற்கனவே சில திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக ’கனா காணும் காலங்கள்’ ’ஆபீஸ்’ ’சத்யா’ போன்ற சீரியல்களில் இவரது நடிப்பு அசத்தலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ’மாப்பிள்ளை சிங்கம்’ ’களரி’ ’கொரில்லா’ உள்ளிட்ட சில படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது விஷ்ணு ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் கடந்த 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆகியது மட்டுமின்றி தேசிய விருதும் பெற்ற ’சில்லாசௌ’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் விஷ்ணு விஜய் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த தகவலை விஷ்ணு விஷால் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து விஷ்ணுவுக்கு ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.