பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள்.. லீக் ஆன பட்டியல்.. பெண் டிரைவர் ஷர்மிளா உண்டா?

  • IndiaGlitz, [Saturday,July 22 2023]

விஜய் டிவியில் பிக்பாஸ் 7வது சீசன் இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது போட்டியாளர்களுக்கான ஆடிஷன் நடைபெற்று வருவதாகவும் இந்த ஆடிஷனில் கலந்து கொண்ட சிலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது கிட்டத்தட்ட உறுதி என்றும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரும்பாலும் விஜய் டிவி பிரபலங்களே கலந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனிலும் அது போல் விஜய் டிவி பிரபலங்கள் சிலர் போட்டியாளர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி உள்பட ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஜாக்லின் பிக் பாஸ் சீசன் 7வது சீசனின் போட்டியாளராக இருப்பார் என்று கூறப்படுகிறது.

அதேபோல் கடந்த சீசனில் ரக்சிதா மகாலட்சுமி கலந்து கொண்ட நிலையில் 7வது சீசனில் அவருடைய கணவர் தினேஷ் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி பார்த்திபன் இயக்கிய ’இரவின் நிழல்’ படத்தில் நடித்த நடிகை ரேகா நாயர் பிக்பாஸ் சீசன் 7வது சீசனில் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் கண்டெண்ட் பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் பிருத்விராஜ் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் அனைவரும் எதிர்பார்த்த கோவையைச் சேர்ந்த பெண் டிரைவர் ஷர்மிளா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கமல்ஹாசன் அவருக்கு கார் பரிசு வழங்கும் போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு போட்டியாளர் கிடைத்துவிட்டார் என்று கூறப்பட்டது.

மேற்கண்ட பிரபலங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இருந்தாலும் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் யார் என்பது நிகழ்ச்சி தொடங்கும் நாளில் தான் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.