இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவரா? அப்ப அசீம் தப்பித்துவிட்டாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்படுவார்கள் என்பதும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்ற ஒருவர் ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்படுவார் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் இந்த வாரம் திங்கட்கிழமை விக்ரமன், அசீம், கதிரவன், ஆயிஷா மற்றும் ஷெரினா ஆகிய 5 பேர் நாமினேஷன் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி யார் யாருக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளன.

நாமினேஷன் செய்யப்பட்ட 5 பேர்களில் குறைந்த பட்சமாக 4 சதவீத வாக்குகள் மட்டுமே ஷெரினா பெற்று உள்ளதை அடுத்து அவர் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் பொம்மை டாஸ்க்கில் அவரது போலி நடிப்பு அவரை இந்த வாரம் வெளியேற்றுவதாக தெரிகிறது.

ஷெரினாவுக்கு அடுத்தபடியாக 7 சதவீத வாக்குகளை ஆயிஷா பெற்று இந்த வார எவிக்சனில் இருந்து கிட்டத்தட்ட தப்பியுள்ளார். இந்த நாமினேஷன் பட்டியலில் உள்ள விக்ரமன் 37 சதவீத வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார். வெளியேற்றப்பட வேண்டிய போட்டியாளர் என்று பலரும் கணித்த அசீம் 33 சதவீத வாக்குகள் பெற்று இந்த வாரம் எவிக்சனில் இருந்து தப்பி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாமினேஷன் பட்டியலில் உள்ள இன்னொரு போட்டியாளர் கதிரவன் 17 சதவீத வாக்குகள் பெற்று உள்ளதால் அவரும் இந்த வாரம் வெளியேற வாய்ப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

 

More News

மாஸ் டான்ஸ், பிரமாண்ட செட், விஜய்யின் குரலில் 'ரஞ்சிதமே': 'வாரிசு' பாடல் ரிலீஸ் தேதி!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழுவினர் துவக்கியுள்ளனர் 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்த்த சூப்பர்ஹிட் திரைப்படம்: இயக்குனருக்கு பாராட்டு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படத்தை பார்த்து இயக்குனருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 

ரஜினி, கமல், விஜய், ஷாருக்கான்.. அடுத்து யாருடன் மோதுகிறார் விஜய்சேதுபதி?

ரஜினி, கமல், விஜய், ஷாருக்கான் ஆகிய முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக பிரபல நடிகர் ஒருவருடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மருத்துவமனைக்கு சென்று சமந்தாவை பார்த்தாரா நாக சைதன்யா? பரபரப்பு தகவல்!

நடிகை சமந்தா சமீபத்தில் அரிய வகை நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை அவருடைய முன்னாள் கணவர் நாக சைதன்யா மருத்துவமனையில் சென்று பார்த்ததாக

ஏர்போர்ட்டில் கட்டிப்பிடித்து செல்பி எடுத்து கொண்ட கீர்த்தி சுரேஷ்.. யாரை தெரியுமா?

ஹைதராபாத் ஏர்போர்ட்டில் தன்னுடைய நெருங்கிய தோழியை கட்டிப்பிடித்து நடிகை கீர்த்தி சுரேஷ் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.