close
Choose your channels

இந்த வார எலிமினேஷன் யார்? டேஞ்சர் ஜோனில் இந்த இருவரா?

Thursday, October 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது என்பதும் குறிப்பாக இந்த வாரம் நடைபெற்று வரும் பொம்மை டாஸ்க் மூலம் போட்டியாளர்களின் உண்மையான முகம் வெளியாகி உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஒரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் ஜனனி, ரக்சிதா, அசல் கோளார், மகேஸ்வரி, ஏடிகே, அசீம், ஆயிஷா என 7 பேர் நாமினேஷன் செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்களில் தற்போது 3 பேர் டேஞ்சர் ஜோனில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வாரம் ஆயிஷாவை ’வாடி போடி’ என பேசிய அசீம், அசீம் மீது செருப்பு கழட்டி தூக்கி எறிந்த ஆயிஷா ஆகிய இருவரும் டேஞ்சர் ஜோனில் உள்ளனர். கடந்த வாரம் இருவரும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட நிலையில் இந்த இருவரும் சேர்ந்து சதி செய்து கொண்டிருப்பதை ரசிகர்கள் ரசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் டேஞ்சர் ஜோனில் இருக்கும் இன்னொரு போட்டியாலர் அசல் கோலார். இவர் பெண் போட்டியாளர்களிடம் செய்யும் சில்மிஷத்தை விடுவதாக இல்லை என தெரிகிறது. எனவே இந்த வாரம் அசீம், ஆயிஷா மற்றும் அசல் கோலார் ஆகிய மூவரில் ஒருவர் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக அசல் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் பிக்பாஸ் வீட்டில் அராஜகமாக விளையாடும் அசீமை வெளியேற்ற வேண்டும் என்று பெரும்பாலான நெட்டிசன்கள் கருதுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment