சர்ச்சைக்கு பதிலளிக்கும் இந்த சீசனின் முதல் குறும்படம்.. தவறு யார் மேல்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பொம்மை டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த பொம்மை டாஸ்க் பல போட்டியாளர்கள் இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது என்பதையும் பார்த்தோம்

இன்று காலை வெளியான புரமோ வீடியோவில் தனலட்சுமி மிகவும் வைலண்ட் ஆக விளையாடுகிறார் என்று அசீம் குற்றம்சாட்டினார். நீயும் ஒரு பெண்தானே இப்படி போட்டியாளர்களை தள்ளி விடலாமா என ஆத்திரமாக கேட்டார். ஆனால் தனலட்சுமி தான் யாரையும் தள்ளிவிடவில்லை என்றும் குறும்படம் வேண்டுமானால் போடட்டும். என் மீது தவறு என்றால் நான் அனைவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் அதில் நான் தவறு செய்யவில்லை என தெரியவந்தால் என்னிடம் என்னை குற்றம் சாட்டிய எல்லோரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்

இந்த நிலையில் நெட்டிசன்கள் தற்போது இந்த டாஸ்க்கின் வீடியோவை வெளியிட்டு தவறு யார் மேல் என்பதை சுட்டிக் காட்டியுள்ளனர். இந்த வீடியோவில் ஷெரின் மற்றும் தனலட்சுமி ஆகிய இருவருமே ஒரே நேரத்தில் தள்ளிவிடப்படுகிறார்கள். ஆனால் தனலட்சுமி உடனே எழுந்து மீண்டும் தனது முயற்சியை தொடர்கிறார். ஆனால் ஷெரின் தலையில் காயம் அடைந்ததை போல் இருக்க உடனே மற்ற போட்டியாளர்கள் அவரிடம் என்ன ஆச்சு என கேட்கின்றனர். இதன்பின்னர் தான் அசீமுக்கும் தனலட்சுமிக்கும் சண்டை வருகிறது.

ஆனால் உண்மையில் அந்த வீடியோவில் ஷெரின் கீழே விழுந்தவுடன் அவருடைய தலை தரையில் படவில்லை என்பது இருந்து தெரிய வருகிறது.. அவர் கீழே விழுந்தவுடன் கையை ஊன்றி எழுந்திருக்கவும் முயல்கிறார். அதனால் அவருக்கு காயம் பட வாய்ப்பில்லை. ஆனால் அவர் ஏன் காயம் அடைந்தது போல் நடித்தார் என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது. விக்ரமன் உள்பட ஒருசிலர் ஷெரின் கீழே விழுந்தாலும் அவர் தலை தரையில் படவில்லை என்று பார்த்ததாகவும் கூறினர்.

இந்த டாஸ்க்கின் சாரம்சமே பிசிக்கலாக யார் பலமுடையவர் என்பதுதான். அதை புரிந்து கொண்டு தான் அனைவரும் இந்த டாஸ்க்கில் பங்கேற்கின்றனர். ஒருசிலர் இந்த டாஸ்க்கின் தன்மையை புரிந்து கொண்டு விலகியும் உள்ளனர். ஆனால் டாஸ்க்கில் இருந்தும் விலகாமல் டாஸ்க்கையும் தொடர்ந்து கொண்டு மற்றவர் மேல் பழி கூறி காயம் அடைந்தது போல் நடிப்பது முறையான விளையாட்டா? என்பதே நெட்டிசன்களின் கேள்வியாக உள்ளது.

மேலும் இந்த டாஸ்கின்போது அசீம் மிகவும் முரட்டுத்தனமாக ஷிவினின் கழுத்தில் கைவைத்து அவரை பலமாக தள்ளுகிறார். ஒரு பெண் என்றும் பாராமல் மனிதநேயமின்றி நடந்து கொண்ட அசீம் குறித்து கமல் கேள்வி எழுப்புவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மொத்தத்தில் இந்த சீசனின் முதல் குறும்படமாக இந்த வீடியோவை கமல் காண்பித்து, உண்மையாகவே தள்ளிவிட்டது யார்? ஷெரின் காயம் அடைந்தது உண்மையா? அசீம், தனலட்சுமி சண்டையில் யார் மீது தவறு? என்பதை இவ்வார சனிக்கிழமை குறும்படம் மூலம் கமல் தீர்ப்பளிப்பார் என்று நம்புவோம்.