பிக்பாஸ் தமிழ் சீசன் 6 தொடங்கும் தேதி இதுதான்: விஜய் டிவி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் 6வது சீசன் வரும் அக்டோபர் மாதம் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஏற்கனவே சீசன் 6 குறித்த புரோமோ வீடியோக்கள் வெளியானது என்பதும் கமல்ஹாசன் இந்த சீசனை தொகுத்து வழங்க உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கும் தேதியை சற்றுமுன் அதிகாரபூர்வமாக விஜய் டிவி அறிவித்துள்ளது. அக்டோபர் 9ஆம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு இதுகுறித்த வீடியோவையும் விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல் கசிந்தது என்பது தெரிந்ததே. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com