கலர்ஃபுல் நீச்சல்குளம், மாஸ் கன்ஃபக்சன் ரூம்: பிக்பாஸ் தமிழ் சீசன் 6ன் பிரமாண்ட செட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி நாளை மறுநாள் முதல் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சிக்காக போடப்பட்ட வீட்டின் செட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படங்களில் இருந்து பிக்பாஸ் வீடு இந்தமுறை பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது என தெரிய வருகிறது.
கலர்ஃபுல் கண்ணாடிகளால் உருவாக்கப்பட்ட இந்த பிக்பாஸ் வீட்டின் டைனிங் டேபிள் மிகவும் அழகாகவும் கண்ணாடி சேர்களுடனும் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் டைனிங் டேபிள் சிறியதாக இருப்பதால் அனைத்து போட்டியாளர்களும் ஒரே நேரத்தில் உட்கார்ந்து சாப்பிட முடியுமா என்பது சந்தேகமே.
கடந்த சில சீசன்களாக நீச்சல் குளம் இல்லாமல் இருந்த நிலையில் இந்த முறை நீச்சல் குளமும் இடம் பெற்று உள்ளது. எனவே பிக்பாஸ் போட்டியாளர்கள் நீச்சல் குளத்தில் குளித்து கும்மாளம் அடிப்பதை பார்க்கலாம்.
பிக்பாஸ் வீடு முழுவதுமே பிரமாண்டமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாத்ரூம் கண்ணாடிகளை சுற்றி அழகான வண்ண வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் இந்த முறை கன்ஃபக்சன் ரூம் வெளிப்புற பார்ப்பதற்கே மிகவும் பிரமாண்டமாக இருக்கிறது. உள்ளேயும் நிச்சயம் அழகிய வேலைப்பாடுகளுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கன்ஃபக்சன் ரூமில் தான் பலர் தங்கள் உணர்ச்சிகளை கொட்ட போகிறார்கள் என்பதை நினைக்கும்போது நிகழ்ச்சியை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது.
மேலும் சுவற்றில் பெண்களின் கண்கள் போன்ற பொறிக்கப்பட்ட டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு அட்டகாசமாக உள்ளது. அதேபோல் சீலிங் அலங்கார விளக்குகளை தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு ஒரு புது அனுபவமாக இருக்கும்.
மொத்தத்தில் பிக்பாஸ் சீசன் 6 முந்தைய சீசன்களை விட பிரமாண்டமாகவும் அழகாகவும் இருக்கும் என்பது இந்த புகைப்படங்களில் இருந்து தெரியவருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments