கலர்ஃபுல் நீச்சல்குளம், மாஸ் கன்ஃபக்சன் ரூம்: பிக்பாஸ் தமிழ் சீசன் 6ன் பிரமாண்ட செட்!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி நாளை மறுநாள் முதல் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சிக்காக போடப்பட்ட வீட்டின் செட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படங்களில் இருந்து பிக்பாஸ் வீடு இந்தமுறை பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது என தெரிய வருகிறது.

கலர்ஃபுல் கண்ணாடிகளால் உருவாக்கப்பட்ட இந்த பிக்பாஸ் வீட்டின் டைனிங் டேபிள் மிகவும் அழகாகவும் கண்ணாடி சேர்களுடனும் உள்ளது. ஆனால் அதே நேரத்தில் டைனிங் டேபிள் சிறியதாக இருப்பதால் அனைத்து போட்டியாளர்களும் ஒரே நேரத்தில் உட்கார்ந்து சாப்பிட முடியுமா என்பது சந்தேகமே.

கடந்த சில சீசன்களாக நீச்சல் குளம் இல்லாமல் இருந்த நிலையில் இந்த முறை நீச்சல் குளமும் இடம் பெற்று உள்ளது. எனவே பிக்பாஸ் போட்டியாளர்கள் நீச்சல் குளத்தில் குளித்து கும்மாளம் அடிப்பதை பார்க்கலாம்.

பிக்பாஸ் வீடு முழுவதுமே பிரமாண்டமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாத்ரூம் கண்ணாடிகளை சுற்றி அழகான வண்ண வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் இந்த முறை கன்ஃபக்சன் ரூம் வெளிப்புற பார்ப்பதற்கே மிகவும் பிரமாண்டமாக இருக்கிறது. உள்ளேயும் நிச்சயம் அழகிய வேலைப்பாடுகளுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கன்ஃபக்சன் ரூமில் தான் பலர் தங்கள் உணர்ச்சிகளை கொட்ட போகிறார்கள் என்பதை நினைக்கும்போது நிகழ்ச்சியை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது.

மேலும் சுவற்றில் பெண்களின் கண்கள் போன்ற பொறிக்கப்பட்ட டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு அட்டகாசமாக உள்ளது. அதேபோல் சீலிங் அலங்கார விளக்குகளை தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு ஒரு புது அனுபவமாக இருக்கும்.

மொத்தத்தில் பிக்பாஸ் சீசன் 6 முந்தைய சீசன்களை விட பிரமாண்டமாகவும் அழகாகவும் இருக்கும் என்பது இந்த புகைப்படங்களில் இருந்து தெரியவருகிறது.

 

More News

மொட்டை மாடியில் சோம்பல் முறிப்பதில் கூட இவ்வளவு அழகா? பூனம் பாஜ்வாவின் செம ஹாட் புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகின் கிளாமர் நடிகைகளில் ஒருவரான பூனம்பாஜ்வா சோம்பல் முறிப்பது போன்ற போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில்

'தளபதி 67' திரைப்படம் ஹாலிவுட் ரீமேக்கா? சம்பவம் செய்ய காத்திருக்கும் லோகேஷ்!

தளபதி விஜய் நடித்து வரும் 66வது திரைப்படமான 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைய இருக்கும் நிலையில் 'தளபதி 67' படத்தின் தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருவதை பார்த்து வருகிறோம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழக கிரிக்கெட் வீரர்: யார் இவர்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நாளை மறுநாள் முதல் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் கிட்டத்தட்ட தெரிய வந்துள்ளனர். 

'அராஜகம் பண்ணாதீங்க... கன்னத்தில் அறைந்த மனைவி குறித்து புகழ்: வீடியோ வைரல்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் தனது மனைவி கன்னத்தில் அறைந்த வீடியோவை பதிவு செய்து 'அராஜகம் பண்றாங்க' என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சூர்யா-பாலாவின் ‘வணங்கான்’ டிராப்பா? பரபரப்பான தகவலை கூறிய நடிகர்!

 நீண்ட இடைவேளைக்கு பின்னர் சூர்யா - பாலா இணைந்த 'வணங்கான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது என்பதும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு