காடுன்னு ஒன்னு இருந்தா.. ராஜான்னு ஒருத்தரு தான இருக்க முடியும்: கமல்ஹாசனின் பிக்பாஸ் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் 6வது சீசன் விரைவில் தொடங்கும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் 6வது சீசன் குறித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
கமல்ஹாசன் இந்த விளம்பரத்தில், ‘வீடுன்னு ஒண்ணு இருந்தா போட்டி இருக்கும். அந்த போட்டி ஒரு கட்டத்தில் வேட்டையாக மாறும். சிலர் மான் மாதிரி துள்ளி குதிப்பார்கள், சிலர் புலி மாதிரி பதுங்கி பாய்வார்கள், சிலர் பாம்பு மாதிரி சீற பார்ப்பார்கள், சிலர் கழுகு மாதிரி காத்திருப்பார்கள். யானை மாதிரி சிலர் மிரள வைப்பார்கள், சிலர் முதலை மாதிரி முழுங்க பார்ப்பார்கள். சிலர் நரி மாதிரி திட்டம் தீட்டுவார்கள். ஆனால் சிலர் மட்டுமே ஆளனும்ன்னு நினைப்பாங்க, சிங்கம் மாதிரி.
காடுன்னு ஒன்னு இருந்தா.. ராஜான்னு ஒருத்தரு தான இருக்க முடியும். ஆனால் இந்த வீட்டில் கடைசியாக மிஞ்சி இருக்கப்போவது யார் என்று முடிவு செய்யப்போவது அவர்கள் இல்லை, நீங்கள் தான்’ என இந்த விளம்பரத்தில் கமல் ஹாசன் பேசிய வசனம் இடம் பெற்று உள்ளது. இதனை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இமானின் முன்னாள் மனைவி, திவ்யதர்ஷினி, ரோஷினி, சீரியல் நடிகை அர்ச்சனா, ஸ்ரீநிதி, தர்ஷா குப்தா, மனிஷா யாதவ், ஷில்பா மஞ்சுநாத், சூப்பர் சிங்கர், ராஜலட்சுமி, விஜே அஞ்சனா உள்ளிட்ட பலர் கலந்துக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
காடுன்னு ஒன்னு இருந்தா.. ராஜான்னு ஒருத்தரு தான இருக்க முடியும்! ?? #BiggBossTamil6 - விரைவில்.. @ikamalhaasan #UlaganayaganKamalhaasan @preethiIndia @NipponIndia #VijayTelevision pic.twitter.com/iRQVv4SFgS
— Vijay Television (@vijaytelevision) September 10, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments