பிக்பாஸ் சீசன் 6-ன் காதல் ஜோடி இவர்கள் தானா? பொறுத்திருந்து பார்ப்போம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒரு காதல் ஜோடி உருவாகி வரும் நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் ஒரு காதல் ஜோடி உருவாகி விட்டதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்
பிக்பாஸ் முதல் சீசனில் ஆரவ்-ஓவியா, இரண்டாவது சீசனில் மகத் - யாஷிகா, மூன்றாவது சீஸனில் கவின் - லாஸ்லியா, நான்காவது சீசனில் பாலாஜி முருகதாஸ்- ஷிவானி, 5 வது சீசனில் அமீர் - பாவனி காதலர்களாக இருந்ததுபோல் தெரிந்தது. ஆனால் இதில் அமீர்-பாவனி தவிர மற்ற நான்கு காதலும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னர் புஷ்வாணம் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பிக்பாஸ் 6வது சீசனில் காதல் ஜோடி யாராக இருக்கும் என நெட்டிசன்கள் அலசி ஆராய்ந்து கொண்டிருந்த போது தற்போது விஜே மகேஸ்வரி மற்றும் ராம் ராமசாமி இடையே காதல் பத்தி கொண்டதாக கூறி வருகின்றனர்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து தான் மிக்சர் திங்க வரவில்லை என்றும் பரபரப்பாக இருப்பேன் என்று கூறி வரும் விஜே மகேஸ்வரி ஏற்கனவே திருமணமாகி கணவரை விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் பிக்பாஸ் போட்டியாளராக உள்ளே வந்துள்ள நிலையில் அவரிடம் ராம் ராமசாமி மட்டும் ஸ்வீட்டாக பேசிவருவது நெட்டிசன்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது
குறிப்பாக சமீபத்தில் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது ‘எல்லோரிடமும் இப்படி ஸ்வீட்டாக பேசுவீர்களா என்ன மகேஸ்வரி கேட்க அதற்கு உங்களிடம் மட்டும் தான் நான் ஸ்வீட்டாக பேசுறேன், அதுவும் சும்மா ஒரு ஜாலிக்கு’ என்று அவர் கூறுகிறார். ராம் ராம் ராமசாமி - விஜே மகேஸ்வரி காதல் ஜோடியாவார்களா? அல்லது முட்டி கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com