நீங்கள் நண்பர்கள் என்று நம்பியவர்கள் கூட ஆதரவு கொடுக்கல.. கமல் கூறுவது யாரிடம்?

நீங்கள் நண்பர்கள் என்று நம்பி இருப்பவர்கள் கூட உங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை என கமல்ஹாசன் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரிடம் கூறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்றைய அடுத்த புரமோவில் இவர் என்னுடன் இருந்தால் உலகம் உய்க்கும் என்று யாரை கூறுவீர்கள் என்று கமல்ஹாசன் போட்டியாளர்கள் இடம் கேட்கிறார். அப்போது ஜனனி தனலட்சுமியின் புகைப்படத்தில் சிகப்பு தழும்பை குத்தி ’நல்லவங்க மாதிரி பழகுவாங்க, ஆனா எப்போ எப்படி ஆவங்க என்று எனக்கே தெரியாது’ என்று கூறுகிறார். அதேபோல் தனம் மீது ராமும் குற்றச்சாட்டு கூறி சிகப்பு தழும்பை அளிக்கின்றார்.

இதனை அடுத்து அசீம் புகைப்படத்தில் சிகப்பு தழும்பை குத்திய ரக்சிதா, ‘நான் என்னுடைய ஆறாவது வாரத்தில் இருந்து என்னுடைய 10 பெர்சண்ட் முகத்தை காட்ட போகிறேன் என்று கூறியுள்ளார். எனவே அவருக்கு இந்த சிகப்பு தழும்பு என்று கூறுகின்றார். இதனை அடுத்து வந்த அசீம், ரக்சிதாவின் புகைப்படத்தில் சிகப்பு தழும்பை குத்தி, ’சிரித்துக்கொண்டே ஊசி குத்துவது என்று சொல்வார்களே அது ரக்சிதா என்று எனக்கு தோன்றுகிறது என்று கூறினார்.

இதனை அடுத்து அனைவரும் தங்கள் கருத்தை தெரிவித்த பின்னர் அசீம் ஆறு சிவப்பு தழும்புகளும் தனம் 4 சிகப்பு தழும்புகளும் பெற்றிருக்கிறார்கள். இதனை அடுத்து அசீமிடம் கமல் கூறிய போது, ‘நீங்கள் தான் நிறைய தழும்பு வாங்கி இருக்கிறீர்கள். நீங்கள் நண்பர்கள் என்று நினைத்தவர்கள் கூட உங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று கூறுகிறார். அப்போது ஆர்ஜே கதிரவனின் காட்சி வருகிறது.



இதனை அடுத்து அதிக தழும்பு வாங்கிய அசீம் மற்றும் தனலட்சுமிக்கு கமல் என்ன அறிவுரை கூறவிருக்கின்றார் என்பதை இன்றைய நிகழ்ச்சியின் போது பார்த்து தெரிந்து கொள்வோம்.