ஆத்திரத்தில் தூக்கி போட்டு உடைத்த ஜனனி.. குயின்ஸி மேல் அப்படி என்ன கோபம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வரும் நிலையில் அவ்வப்போது போட்டியாளர்கள் மத்தியில் சின்ன சின்ன சண்டைகளும் எழுந்து வருவது நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தைஅதிகரித்து வருகிறது.
அந்த வகையில் குயின்ஸி மற்றும் ஜனனி ஆகிய இருவருக்கும் இடையே நடக்கும் சண்டையின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. நள்ளிரவில் நீச்சல் குளத்தில் குயின்ஸி குளித்துக் கொண்டிருக்கும் போது ஒரு டவலுடன் வருகிறார் ஜனனி. அப்போது அந்த டவல் தன்னுடையது என்றும் தன்னுடைய டவலை நீ ஏன் எடுத்ததாய்? என்றும் எல்லோர் முன்னிலையிலும் குவின்ஸி கேட்கிறார்.
இதனை அடுத்து குயின்ஸியை தனியாக சந்திக்கும் ஜனனி எல்லோர் முன்னிலையிலும் ஏன் அப்படி கேட்டாய்? உன்னுடைய டவல் என்று எனக்கு தெரியாது, தெரியாமல் தான் எடுத்தேன் என்று கூறினார்.
தெரியாமல் தான் நீ செய்தாய் என்றாலும் இனிமேல் நீ என்ன செய்தாலும் நான் உன்னிடம் எதையும் கேட்கமாட்டேன். என்னுடைய பொருளை நீ பயன்படுத்தினால் கூட நான் எதையும் கேட்கமாட்டேன் என்று கூறுகிறார். மேலும் என்னுடைய பொருளை என்னுடைய அப்பா கூட தொட மாட்டார் என்று கூற இதனை அடுத்து அருகிலிருந்த பொருளை தூக்கி போட்டு உடைக்கும் ஜனனி, ‘தெரியாமல் எடுத்துவிட்டேன், மன்னித்துவிடு என்று சொல்லி விட்ட போதிலும் ஏன் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறாய். யாராவது வேண்டுமென்றே செய்வார்களா? என்று ஆத்திரத்துடன் கூற குவின்ஸி அதிர்ச்சி அடைவதுடன் அந்த வீடியோ முடிவுக்கு வருகிறது.
Sambavam starting point
— BIGG BOX TROLL (@drkuttysiva) November 4, 2022
Janani vs Queency
Oru Dress ku ivlo Problem ha??#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil6 pic.twitter.com/bwmNe4iZVt
Janani vs Queency Fight
— BIGG BOX TROLL (@drkuttysiva) November 4, 2022
Part 2#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil pic.twitter.com/F5YtrP5lVB
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com