அவன் இவன் என சக போட்டியாளரை பேசிய தனலட்சுமி.. கமல் கண்டிப்பாரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தனக்கு மரியாதை தரவேண்டும் என்றும் தன்னிடம் மரியாதையாக பேச வேண்டும் என்றும் தனலட்சுமி நேற்று ராபர்ட் மாஸ்டரிடம் வாக்குவாதம் செய்த நிலையில் அவர் அசீமை அவன் இவன் என மரியாதை இல்லாமல் என்று பேசிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய தனலட்சுமி நேற்று நிவாஷினியிடம் அசீம் குறித்து பேசிய போது அவன் இவன் என்று பேசினார். ஒவ்வொரு வாரமும் ஒரு கண்டெண்டை எடுத்துக்கொண்டு அந்த வார இறுதியில் கமல்ஹாசனிடம் திட்டு வாங்குவது அசிங்கமாக இல்லையா என்றும் அசீமை கடுமையாக விமர்சனம் செய்தார். அவன் இவன் என்று அசீமை தனலட்சுமி பேசியதை நிவாஷினியும் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய நிகழ்ச்சியின்போது தன்னை நாய் என்று மரியாதை குறைவாக பேசியதாக ராபத் மாஸ்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தனலட்சுமி தன்னிடம் மரியாதையாக பேச வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் அவரே இன்று அசீமை அவன் இவன் என்று பேசியிருப்பது அவர் எந்த அளவுக்கு மற்ற போட்டியாளர்களுக்கு மரியாதை தருகிறார் என்பதை சுட்டிக்காட்டுகிறது. இதனை கமல்ஹாசன் இந்த வாரம் கண்டிப்பாரா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
Dhana towards Azeem
— BIGG BOX TROLL (@drkuttysiva) November 2, 2022
Her words avan ivan Vakkaluthu vangunan ?? #BiggBoss #BiggBossTamil #BiggBossTamil6 pic.twitter.com/z9GSjMJxkW
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments