நடிகர் விமல் அடுத்த படத்தில் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 இரண்டு நடிகைகள்.. வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Thursday,June 20 2024]

விமல் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரண்டு போட்டியாளர்கள் நடிக்க உள்ள நிலையில் இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர் ஷிவின் மற்றும் குயின்சி. இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே தோழிகளாகவும், வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னும் தங்கள் நட்பை தொடர்ந்து வந்தனர் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் விமல் நடிக்கும் புதிய படத்தில் ஷிவின் மற்றும் குவின்சி ஆகிய இருவருமே முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. படப்பிடிப்பு நிறைவு நாளில் பூஜை படக்குழுவினர்களுடன் விமல், ஷிவின், குவின்சி ஆகியோர் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.