வாடி.. போடி.. செருப்பை கழட்டிய ஆயிஷா: கலவர பூமியான பிக்பாஸ் வீடு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6வது சீசன் தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில் 50 நாட்களுக்கு பிறகு நடக்க வேண்டிய சண்டை இரண்டே வாரத்தில் தொடங்கி விட்டது ஒரு பக்கம் ஆச்சரியமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அநாகரீகமாக உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அசீம் போன்ற பொறுப்பற்ற போட்டியாளர்களை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்து விஜய் டிவி பெரிய தவறை செய்து விட்டது என்றும் பெண்களுக்கு மரியாதை கொடுக்க தெரியாதவர், சக போட்டியாளர்கள் இடம் மரியாதையுடன் நடந்து கொள்ள தெரியாதவர்களை எல்லாம் எப்படி இந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ள வைக்கலாம் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆயிஷாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட உடன் ’போடீ’ என ஆவேசமாக அசீம் கூறியதோடு, போடி என்று சொல்லாதீர்கள் என அப்போதும் மரியாதையாக ஆயிஷா கேட்டுக்கொள்ள திரும்ப திரும்ப போடி என்று சொல்வேண்டி’ என்று அசீம் கூறுவது அநாகரிகத்தின் உச்சமாக பார்க்கப்படுகிறது.
ஒரு கட்டத்தில் கடுப்பான ஆயிஷா செருப்பை கழட்டி அசீம் மீது க்கி எறிந்ததால் பிக்பாஸ் வீடே கலவர பூமியாகிவிட்டது போல் தெரிகிறது. இந்த நிலையில் அசீம் மீது பிக் பாஸ் மற்றும் கமல்ஹாசன் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Violance Part
— GP Muthu Army (@drkuttysiva) October 21, 2022
Azeem and Ayeesha#GPMuthuArmy #GPMuthu #BiggBoss #BiggBossTamil6 #BiggBossTamil pic.twitter.com/57XUTEopoQ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments