close
Choose your channels

'போடீ...' ஆயிஷாவிடம் எல்லை மீறிய ஆண் போட்டியாளர்: பிக்பாஸ் நடவடிக்கை எடுப்பாரா?

Friday, October 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆண் போட்டியாளர் ஒருவர் ஆயிஷாவை பார்த்து 'போடீ...’ என கூறியதை அடுத்து பிக்பாஸ் மற்றும் கமல்ஹாசன் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 12வது நாளாக நடைபெறும் நிலையில் 1 முதல் 13 வரையில் ரேங்கிங் செய்ய வேண்டும் என பிக்பாஸ் கூறுகிறார். இதனையடுத்து போட்டியாளர்கள் தங்கள் இடத்தை தக்க வைத்துள்ளனர்.

தனலட்சுமி, சாந்தி, குயின்ஸி ஆகியோர் முதல் மூன்று இடத்தில் உள்ளனர். ரக்சிதா, ஏகேடி, விக்ரமன் ஆகியோர் 4 முதல் 6வது இடங்களில் உள்ளனர். ஜனனி மற்றும் ஆயிஷா 8வது மற்றும் 9வது இடத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த தரவரிசை குறித்து அசீம் கருத்து கூறியபோது, ‘தகுதி இல்லாத பலர் இங்கு நிற்கின்றார்கள். குறிப்பாக முதல் இடத்தில் உள்ளவர், 6வது இடத்தில் உள்ளவர் மற்றும் 9வது இடத்தில் உள்ளவர் தகுதியே இல்லாதவர்கள்’ என்று கூற 9வது இடத்தில் இருந்த ஆயிஷா ஆவேசமானார்.

‘என்னை தகுதியில்லாதவர் என்று எப்படி நீங்கள் கூறலாம் என்றும் தகுதி இருப்பதால்தான் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்று ஆயிஷா கூறுகிறார். அதற்கு நீ தூங்குவதை தவிர இந்த வீட்டில் வேறு என்ன செய்கிறாய் என்று அசீம் கேட்க அதற்கு ஆயிஷா, ‘நீங்கள் மட்டும் தூங்கவில்லையா என பதிலுக்கு கூறுகிறார்.

அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் அசீம், 'போடீ...’ என ஆயிஷாவை கூற, அதனால் ஆவேசமான ஆயிஷா ’உங்களை நான் வாங்க .. போங்க என்று மரியாதையாக சொல்கிறேன், ஆனால் நீங்கள் என்னை எப்படி போடி என்று சொல்லலாம் என கேட்பது உடன் இன்றைய முதல் புரமோ முடிவுக்கு வருகிறது.

ஒரு பெண் போட்டியாளரை மரியாதை இல்லாமல் போடி எனக்கூறிய அசீம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமல்ஹாசனுக்கும் பிக்பாஸ்க்கும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment