close
Choose your channels

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் உண்மையான 15 போட்டியாளர்கள் இவர்கள் தான்!

Saturday, October 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக பலரது பெயர்கள் கூறப்பட்ட நிலையில் தற்போது உண்மையிலேயே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 15 போட்டியாளர்களின் பெயர்கள் தெரியவந்துள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் கலந்து கொண்ட 8 போட்டியாளர்களின் பெயர்கள் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது முதல்கட்டமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் 15 போட்டியாளர்கள் முழு விவரங்களை பார்ப்போம்.

1. ஜிபி முத்து: நெல்லையை சேர்ந்த இவர் டிக்டாக், யூடியூப் உள்ளிட்ட சமூகவலைத்தளஙக்ளில் பிரபலம்.

2. நடிகர் அசீம்: சீரியல் நடிகர்

3. அசல் கொலார்: இவர் யூடியூபில் ஹிட்டான ஜோர்தால என்கிற பாடல் உள்பட பல பாடல்களை பாடியுள்ளார்.

4. ஷிவின் கணேசன்: இவர் ஒரு திருநங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

5. ராபர்ட்: பிரபல நடன இயக்குனர். இவர் விஜய், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றியுள்ளார். சில படங்களில் நடித்துள்ளார்.

6. ஷெரினா : சூப்பர் மாடலான இவர் இந்த சீசனில் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

7. ராம் ராமசாமி: கிரிக்கெட் வீரர், சினிமா நடிகர். சென்னையை சேர்ந்தவர்.

8. ஏடிகே: ராப் பாடகரான இவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் கடல் படத்தில் இடம்பெற்ற பாடல், ’அச்சம் என்பது மடமையடா’ படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் உள்பட பல பாடல்களை பாடியுள்ளார்.

9. அமுதவாணன்: விஜய் டிவியின் நடன நிகழ்ச்சிகளிலும், காமெடி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டவர். சமீபத்தில் 'கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்’ நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆனார்.

10. விஜே கதிர்: சன் மியூசிக் சேனலில் விஜேவாக இருந்தவர். சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார்.

11. ஆயிஷா: மாடல் அழகி, பல விளம்பரங்களில் நடித்துள்ளார். சத்யா சீரியல் மூலம் பிரபலமானவர்.

12. தனலட்சுமி: மக்கள் சார்பில் தேர்வு செய்யப்பட்டவர்

13. ரக்சிதா: பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் பிரபலமானர்வர். சரவணன் மீனாட்சி சீரியலிலும் இவர் நடித்துள்ளார்.

14. ஜனனி: இலங்கையை சேர்ந்தவர், தொகுப்பாளினி

15. விஜே மகேஸ்வரி: தொகுப்பாளினி மற்றும் நடிகை. ரைட்டர் படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாகவும், ‘விக்ரம்’ படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.

ஏற்கனவே கூறப்பட்ட பட்டியலில் ராஜலட்சுமி, மன்சூர் அலிகான், மணிகண்டன், டிடி, ரோஷினி, தர்ஷா குப்தா, மைனா நந்தினி உள்ளிட்டோர் இந்த சீசனில் கலந்து கொள்ளவில்லை. ஒருவேளை இவர்கள் வைல்ட்கார்ட் போட்டியாளர்களாக வருவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment