பிக்பாஸ் சீசன் 5 எப்போது? ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாக தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,February 24 2021]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக்பாஸ் உள்ளது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் முடிவடைந்து விட்டது என்பது தெரிந்ததே. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீஸனில் முகேன் மற்றும் நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் டைட்டில் பட்டத்தை வென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு சீசனும் ஜூன் மாதம் தொடங்கப்படும் நிலையில் கடந்த ஆண்டு மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அக்டோபர் தொடங்கி ஜனவரியில் முடிவடைந்தது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான ஆரம்பகட்ட பணிகள் ஆரம்பமாகி விட்டதாகவும் வரும் ஜூன் மாதம் ஐந்தாவது சீசன் தொடங்கும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

ஐந்தாவது சீசனையும் கமலஹாசனே தொகுத்து வழங்குவார் என்றும் அவர் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் வரை தேர்தல் பணிகளில் பிசியாக இருப்பார் என்பதால் ஜூன் மாதம் ஐந்தாவது சீசன் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

எனவே இன்னும் ஒரு சில வாரங்களில் ஐந்தாவது சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் யார் யார் என்ற செய்திகளும் கசியத் தொடங்கி விடும் என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த பரபரப்பான செய்திகள் விரைவில் வைரலாக தொடங்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.