பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேரடியாக ஃபினாலேவுக்கு செல்லும் போட்டியாளர் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 84 நாட்களாக நடைபெற்ற நிலையில் இன்று 85வது நாள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஓரிரு வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில் பிக்பாஸ் நேரடியாக இறுதிப் போட்டிக்குச் செல்லும் போட்டியாளரை தேர்வு செய்ய டிக்கெட் ஒன்றை அளித்துள்ளார். இந்த டிக்கெட்டை பெறும் தகுதி உள்ளவர் யார் என்பதை நீங்களே தேர்வு செய்து சொல்ல வேண்டுமென பிக்பாஸ் அறிவித்திருக்கிறார். அதேபோல் இந்த டிக்கெட்டை பெற தகுதி இல்லாதவர் யார் என்பதையும் தேர்வு செய்ய வேண்டும் என பிக்பாஸ் அறிவிக்கிறார். இதனை அடுத்து பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டாஸ்க் குறித்து நிரூப் கூறும்போது ’இந்த டிக்கெட்டை பெறுவதற்கு சண்டை போட்டு ஒரு பெரிய கலவரமே உண்டாக்க வேண்டும் என்று நினைத்தாலும் அது மாதிரி பண்ணி கொள்ளலாம்’ என்று கூறுகிறார். எனவே நேரடியாக ஃபினாலேவுக்கு செல்லும் டிக்கெட்டை பெற போட்டியாளர்கள் மத்தியில் ஒரு பெரிய கலவரம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.