இமான் அண்ணாச்சிக்கு கிடைத்த தலைவர் பதவியை பறித்த போட்டியாளர்!

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களுக்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று 57வது நாள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் புதிய தலைவருக்கான டாஸ்க் நடைபெறும் என்றும் அதே போல் நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான முதல் புரமோ வீடியோவில் புதிய தலைவர் பதவிக்கான டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் இமான் அண்ணாச்சி, சிபி மற்றும் அபிஷேக் ஆகிய மூவரும் கலந்துகொள்கின்றனர். கோபுரங்கள் சாய்வதில்லை என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள தலைவருக்கான டாஸ்க்கில் சிபி மற்றும் அபிஷேக் செய்த கோபுரம் கீழே விழுந்து விட்டதை அடுத்து இமான் அண்ணாச்சியின் கோபுரம் நிற்பதால் அவர் வெற்றி பெற்றதாக கடந்த வார கேப்டன் அபினய் அறிவிக்கின்றார்.



இதனை அடுத்து இமான் அண்ணாச்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் தலைவர் பதவியை மாற்றக்கூடிய சலுகையை காயின் வைத்திருப்பவர் மாற்ற விரும்பினால் மாற்றலாம் என பிக் பாஸ் அறிவிக்கிறார்.

இதனை அடுத்து இந்த வார தலைவராக நான் இருக்கின்றேன் என நிரூப் கூறுகிறார். இதனை அடுத்து என்னை பார்த்து நீ பயந்து விட்டாயா என்று இமான் அண்ணாச்சி கூறும் காட்சிகளோடு இன்றைய முதல் புரமோ முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரம் தலைவராக நிரூப் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவரது தலைமை எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன்னர் அவர் காலமானார் என்ற தகவல் திரையுலகினர்

'மாநாடு' படத்தின் 3 நாட்கள் வசூல்: சுரேஷ் காமாட்சியின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே படக்குழுவினர் அனைவருக்கும் தனித்தனியாக தொலைபேசி மூலம்

கனமழை எதிரொலி: நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை!

தென்கிழக்கு வங்கக் கடலில் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

ஜப்பானில் 'மாநாடு' கொண்டாட்டம்: வைரல் வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படங்கள் ஜப்பானில் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்ற நிலையில் தற்போது சிம்புவின் 'மாநாடு' படத்தையும் ஜப்பானியர்கள் கொண்டாடி வருவது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதை மட்டும் செய்யாதீங்க: 'மாநாடு' படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு வெங்கட்பிரபு வேண்டுகோள்!

'மாநாடு' திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க வரும் ரசிகர்கள் தயவு செய்து இதை மட்டும் செய்ய வேண்டாம் என இயக்குனர் வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.