பிக்பாஸ் பவானிரெட்டியின் சோகமான மறுபக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் தமிழ் ஐந்தாவது சீசன் நேற்று முன்தினம் தொடங்கியது என்பதும் நேற்றைய தினம் முதல் நாளில் போட்டியாளர்கள் அனைவரும் ஜாலியாக ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டு இருந்தனர் என்பதையும் பார்த்தோம்.
நேற்றைய நிகழ்ச்சியில் பவானி ரெட்டி மற்றும் தாமரைச்செல்வி ஆகிய இருவரும் மனம் விட்டு பேசி கொண்டு இருந்தார்கள் என்பதும், தனக்கு 32 வயது என்று பவானி ரெட்டி கூறியபோது அதை தாமரைச்செல்வி நம்பவே இல்லை என்றும் இன்னும் சின்னப் பெண் போலவே இருக்கிறாய் என்றும் கூறினார்.
பிக்பாஸ் வீட்டில் ஜாலியாக இருக்கும் பவானி ரெட்டியின் இன்னொரு பக்கம் சோகமாக இருந்தது என்பது நேற்று அவர் மனம்விட்டு பேசியதில் இருந்து தெரிய வந்தது. தான் நடிகையாக இருந்தாலும் கணவர் குடும்பம் குழந்தைகள் என சந்தோசமாக இருக்க வேண்டும் என தான் விரும்பியதாகவும், ஆனால் திருமணமான ஏழே மாதத்தில் தனது கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அந்த தற்கொலையால் தன் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது என்றும் என்ன நடந்தது என்பதை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்றும் பவானி ரெட்டி சோகமாக கூறியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
விஜய் டிவியில் ஒரு சில சீரியல்களில் நடித்து உள்ள பவானி ரெட்டி, சீரியல் இத்துடன் போதும் என்றும் இனி மேல் வெப் சீரிஸில் நடிக்க விரும்புவதாகவும் தமிழ் தெலுங்கு வெப்சீரிஸில் தற்போது நடித்து வருவதாகவும் பவானிரெட்டி கூறினார். மேலும் தாமரைச்செல்வி அப்பாவியாக வெப்சீரீஸ் என்றால் என்ன என்று கேட்டதும் அதற்கு பவானிரெட்டி விளக்கம் கூறியதும் தனிக்கதை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments