தாமரை-ஸ்ருதி விவகாரம் ராஜூ பாய் மீது திரும்புகிறதா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத அளவில் ஐந்து காயின்கள் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன என்பதும் இந்த காயின்கள் 5 வாரங்கள் போட்டியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் பிக்பாஸ் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த காயின்கள் அபினய், வருண், இசைவாணி, பாவனி, தாமரை ஆகியோர் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நேற்று தாமரையின் காயினை ஸ்ருதி மற்றும் பாவனி திட்டமிட்டு எடுத்துவிட்டனர். இதனால் தாமரை ஆத்திரமடைந்து ஆவேசமாக பேசி விட இது ஒரு கேம்தான் இந்த காயினை திருடுவது என்பது கேமில் உள்ள பகுதிதான், அப்படி இருக்கும்போது எப்படி தாமரை இவ்வாறு பேசலாம் என ஸ்ருதி மற்றும் பாவனி பஞ்சாயத்து செய்கின்றனர்
இந்த பஞ்சாயத்தின் போது தாமரைக்கு ஆதரவாக ராஜூ சில விஷயங்கள் பேச இதனால் ஸ்ருதி அதிர்ச்சி அடைந்து அழ ஆரம்பிக்கிறார். இதனால் இந்த விவகாரம் ராஜூ மீது திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ராஜுவை கமல்ஹாசன் உள்பட சக போட்டியாளர்கள் ரசிகர்களும் பாராட்டி வரும் நிலையில் திடீரென அவருக்கு எதிராக இந்த விவகாரம் திரும்புமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் பாவனி மற்றும் ஸ்ருதிக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் ராஜூபாய் என்றும் ரசிகர்கள் சிலர் அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்றைய முதலாவது புரமோவில், ‘இந்த விஷயத்தை எங்களுக்கு கிளியர் செய்யுங்கள் பிக்பாஸ் என ஸ்ருதி வேண்டுகோள் விடுக்கிறார். அதுமட்டுமின்றி காயின் எடுக்கிறது கேம் இல்லை, மக்கள் நம்மை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதுதான் கேம் என்றும் ராஜூ இந்த விஷயத்தில் தேவையில்லாமல் பேசி பெயரை டேமேஜ் செய்துவிட்டார் என்றும் பாவனி, ஸ்ருதி ஆகிய இருவரும் பேசும் காட்சிகள் உள்ளன. மொத்தத்தில் இந்த காயின் விவகாரம் இந்த வாரம் கமல்ஹாசன் எபிசோடில் முக்கிய இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments