செம்மையா பண்ற நீ: மீண்டும் மோதும் தாமரை-பிரியங்கா!

கடந்த சில நாட்களாகவே தாமரை மற்றும் பிரியங்கா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது என்பதும் இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதங்கள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இன்று ஆரம்பித்திருக்கும் புதிய டாஸ்க்கில் மீண்டும் பிரியங்கா மற்றும் தாமரை இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இந்த டாஸ்க்கில் பிரியங்கா பேசும்போது, ‘இந்த வீட்டில் சிலபேர் ஒண்ணு பண்றாங்க அதுக்கு அப்புறம் பின்னாடி இன்னொன்னு பேசறாங்க என்று கூறுகிறார்

இதற்கு பதிலளித்த தாமரை, ‘நீ சிண்டு முடித்து பேசுவதிலேயே குறியாய் இருக்கின்றாயே, பரவால்ல நீ செமையா பண்ற’ என்று கூற, ‘அதை நீ சொல்லாதே என்று பிரியங்கா கூறுகிறார்

‘நீ பயங்கரமான பண்றப்பா, ஆத்தி நான் கூட என்னமோ நினைச்சேன்’ என்று தாமரை கூறுகிறார் அதன்பின் பாவனியிடம் பிரியங்கா குறித்து தாமரை கூறியபோது, ‘ஒருத்தர் பாசமாக இருந்தால் அவரிடம் உன் பாசத்தை பொழிவாய், உன் பேச்சை நான் மட்டம் தட்டி பேசினால் என்னை மட்டம் தட்டி பேசுவியா, நான் நியாயத்தை தானே பேசுகிறேன்’ என்று தாமரை ஆவேசமாக கூறும் காட்சிகள் ஓடுகின்றன. மொத்தத்தில் மீண்டும் தாமரை-பிரியங்கா மோதும் காட்சிகள் இன்றைய நிகழ்ச்சியில் பிரதான இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.