கமல்ஹாசனை பேச விடாமல் பட்பட்டென்று பேசிய தாமரை-பாவனி!

  • IndiaGlitz, [Saturday,November 06 2021]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் தாமரை மற்றும் பாவனி ஆகியோர் இடையே ஆவேசமான சண்டை வந்தது என்பதும் ஒருவருக்கொருவர் அடிப்பதற்காக கை ஓங்கும் அளவிற்கு அந்த சண்டை நீடித்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த சண்டையின் பஞ்சாயத்து என்று கமல்ஹாசன் முன்னிலையில் வருகிறது. இது குறித்து கமல்ஹாசன் விசாரிக்க முயற்சித்த போது ’இந்த பொண்ணு என்னையே குறை சொல்கிறது. என்னுடைய மனது நோகும் படி பேசுகிறது’ என்று தாமரை குற்றஞ்சாட்டுகிறார். அதனால் எனக்கு கோபம் பயங்கரமாக வருகிறது என கூற, அப்போது பாவனி, ‘தாமரை ஏதோ உள்ளுக்குள் வைத்துக்கொண்டு தான் பேசுகிறார்கள்’ என்று கூறிவிட்டு, ‘அதன்பின் தனக்கு ஒரு சந்தேகம் என்றும் தாமரை பட்பட்டென்று பேசுகிறார்கள் என்று கூற, அவரைப் பேச முடிக்க விடாமல் ’நான் எதில் பட்பட்டென்று என்று பேசினேன் என்று தாமரை கேட்க, நீங்கள் பட்பட்டென்று பேசவே இல்லையா என பாவனி திருப்பி கேட்க, ‘எது நியாயம் இல்லையோ அதில்தான் நான் பட்பட்டென்று பேசுவேன் என தாமரை சொல்ல, அப்போது கமல்ஹாசன் ஏதோ சொல்ல வரும்போது அவர் சொல்ல வருவதை கவனிக்காமல் தாமரை மற்றும் பாவனி ஆகிய இருவரும் வாதம் செய்வதிலேயே குறியாக இருக்கின்றனர்.

முன்னதாக இன்றைய முதல் புரமோவில், ‘தீபாவளி சலுகையாக எவிக்சன் இருக்காது என்று பலர் நினைக்கிறார்கள், ஆனால் கண்டிப்பாக இந்த வாரம் எவிக்சன் உண்டு என்று கமல்ஹாசன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

காதலியை அறிமுகம் செய்த கே.எல்.ராகுல்… வைரலாகும் பதிவு!

இந்தியக் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ் மேனாகவும்

கடும் கண்டனங்கள் எதிரொலி: 'ஜெய்பீம்' படத்தில் மாற்றப்பட்ட காட்சி!

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் வாதிகளும் கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரையுலக

சென்னையில் வெளுத்து வாங்கப்போகிறது கனமழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் இன்று இரவும் நாளையும் கன மழை வெளுத்து வாங்க போகிறது என தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். 

அச்சுறுத்தும் டெங்கு… காஷ்மீரில் 1,000 ஆக உயர்ந்த பாதிப்பு!

மழைகாலத்தில் பரவும் தொற்றுநோயான டெங்கு தற்போது இந்தியா

திடீர் டிவிஸ்ட் அடித்த ரன் ரேட்டிங்… இந்தியா அரை இறுதிக்குள் நுழையுமா?

ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிக்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன