ஏய் வாயை மூடு, என்ன நக்கலா? தாமரை - இசைவாணி மோதல்!

பிக்பாஸ் வீட்டில் தற்போது நடைபெற்றுவரும் உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி டாஸ்கில், கண்ணாடி மற்றும் அதன் பிரதி பிம்பங்களாக நடித்து வருபவர்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் இன்று இசைவாணி மற்றும் தாமரை ஆகிய இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இசைவாணி குறித்து தாமரை தனது கருத்துகளை கூறிக் கொண்டிருக்கும் போது அதனை மிகவும் வெறுப்புடன் இசைவாணி கேட்டுக் கொண்டிருக்கிறார்

அதன்பின்னர் ஒரு கட்டத்தில் தாமரை இசைவாணியை ’ஏய் வாய மூடு’ என்று சொல்ல, அதற்கு ‘என்ன பேசுறீங்க நக்கலா?’ என்று இசைவாணி திருப்பிக் கேட்க இருவருக்கும் இடையே மோதல் வெடிக்கும் அளவுக்கு இன்றைய முதல் புரமோவின் காட்சிகள் உள்ளது. மொத்தத்தில் இந்த கண்ணாடி டாஸ்க் போட்டியாளர்கள் மத்தியில் பெரும் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.