பிக்பாஸ் தமிழ் சீசன் 5 தொடங்கும் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சீசனுக்கான போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
தற்போது வரை ஷகிலாவின் மகள் மிளா, பிரியங்கா, ஜிபி முத்து, கனி, உள்பட ஒருசிலர் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உறுதி என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் தேதி சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சற்றுமுன் வெளியான பிக்பாஸ் புரமோ வீடியோவில் கமல்ஹாசன் பேசும் காட்சிகளும் கடைசியில் அக்டோபர் 3ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து பிக்பாஸ் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஏற்கனவே சர்வைவர் ஒரு பக்கம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும், ஐபிஎல் போட்டிகள் இன்னொரு பக்கம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதும் தெரிந்ததே. இந்த இரண்டு போட்டிகளையும் சமாளித்து பிக்பாஸ் நிகழ்ச்சி வழக்கம்போல் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com