இதெல்லாம் நான் எங்கம்மா கிட்ட கேட்டதே கிடையாது: ராஜூவின் நெகிழ்ச்சியான பேச்சு

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் தற்போது இந்த வீட்டில் இருந்த 90 நாட்களில் தாங்கள் கற்றுக் கொண்டது என்ன என்பது குறித்து கூறி வருகின்றனர்.

முந்தைய புரமோ வீடியோவில் பிரியங்கா கற்றுக்கொண்டது என்ன என்பது குறித்து பேசினார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது ராஜு கூறும் காட்சிகள் இரண்டாவது புரமோ வீடியோவில் உள்ளன.

இந்த வீட்டில் இருந்து நான் கற்றுக் கொண்டது என்னவென்றால் முதலில் என் வீட்டிலுள்ள எல்லோரிடமும் பேச வேண்டும் என்பதை நான் கற்றுக்கொண்டேன். தினசரி எங்க அம்மாவிடம் கால் பண்ணி பேசும்போது சாப்பிட்டியா, சரி சாப்பிட்டேன், ஓகே, அவ்வளவு தான் நான் பேசுவேன். மற்றபடி அவர்கள் மனதில் என்ன ஓடுகிறது? என்ன பண்ண வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்? என்பதை நான் கேட்டதே இல்லை.

இனிமேலாவது என் அம்மாவிடம் அடிக்கடி பேச வேண்டும் என்பதை நான் இந்த வீட்டில் இருந்து கற்றுக்கொண்டேன் என்று ராஜூ நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.