கலைஞர்கள் கஷ்டத்தை வெளியே சொல்லக்கூடாது: பாடகிக்கு டிஸ்லைக் போட்ட ராஜூ ஜெயமோகன்

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களை மனம்விட்டு தெரிவித்து வருகின்றனர் என்பதை முதல் புரமோவில் பார்த்தோம். குறிப்பாக முதல் புரமோவில் இசைவாணி தனது சிறுவயது கஷ்டங்களை கூறினார் என்பதும் மற்ற போட்டியாளர்கள் அவரது கதையை கேட்டு கண்ணீர் வடித்தனர் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இதனை அடுத்து இரண்டாவது புரமோவில் ராஜு ஜெயமோகன் ஒரு முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியபோது, ‘கலைஞர்கள் யாரும் அவர்களுடைய கஷ்டத்தை காட்டாமல், அவர்களை பார்த்தால் சிரிக்க மட்டுமே செய்யணும் என்ற நிலையில் இருக்க வேண்டும். நம்முடைய கஷ்டத்தை சொல்லி தான் ஆக வேண்டும் என்ற மேடை தான் இது. இருந்தாலும் உங்கள் பாட்டில் உள்ள எனர்ஜி, உங்கள் சோகக்கதையில் இல்லை. எல்லாரும் சூப்பர் சூப்பர் என்று தட்டிகொடுத்தால் நாம் முன்னேற மாட்டோம். ஏதாவது நடந்து போகிற வழியில் சுவர் இருந்தால் அதை நாம் உடைக்க வேண்டும் என்று நினைப்போம். நான் அந்த சுவராக இருக்கின்றேன், இந்த சுவரை உடைத்து அவர் மேலே வரவேண்டும் என்று கூறி பாடகி சின்ன பொண்ணுக்கு அவர் டிஸ்லைக் கொடுத்தார்.

மேலும் இதை தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் என்று அவர் கூறியதை அடுத்து ’இல்லை நான் தவறாக நினைக்கவில்லை’ என்று சின்ன பொண்ணு தெரிவித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் காமெடி செய்வது மட்டுமன்றி, கருத்துக் கூறுவதும் சிறந்தவர் என்பதை ராஜூ ஜெயமோகனின் இந்த பேச்சு உணர்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.