ராஜூ ஜெயமோகன், ஐக்கி காதலை படம்பிடித்த இமான் அண்ணாச்சி!

ஒவ்வொரு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு காதல் ஜோடி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த ஐந்தாவது சீசனில் காதல் ஜோடி யார் என்ற கேள்விக்கு இன்னும் ஒரு சில நாட்களில் பதில் தெரிந்துவிடும் என்று ஆர்வத்துடன் பார்வையாளர்கள் காத்திருக்கின்றனர்

இந்த நிலையில் நேற்று ராஜூ ஜெயமோகன் மற்றும் ஐக்கி ஆகிய இருவரையும் காதல் காட்சியில் நடிக்கும்படி இயக்குனர் போல இமான் அண்ணாச்சி டாஸ்க் கொடுத்தார். இந்த டாஸ்க்கில் இருவரும் காதலிப்பது போல நடித்தனர்

ஒரு செருப்பு கடையில் காதலர் இருவரும் சந்தித்து செருப்பு வாங்குவது போன்ற காட்சி என்று இருவரிடம் கூறி நடிக்க சொன்னபோது ராஜூ ஜெயமோகன் மற்றும் ஐக்கி ஆகிய இருவரும் அந்த காட்சியில் நடித்தனர்.

’செருப்பு வாங்க வந்தியா? என ராஜூ கேட்க, ஏன், உங்களுக்கு தான் என்று செருப்பு வேண்டுமா என்று ஐக்கி பதிலளிக்கின்றார். அப்போது ராஜூ , ‘செருப்பை விட முக்கியமான பொறுப்பு நீ இருக்கும்போது என்னால செருப்பு பற்றி சிந்திக்க முடியலை என்று டி ராஜேந்தர் பாணியில் கூற அதற்கு ஐக்கியும் ’அவ்வளவு பொறுப்பு இருக்கிறவர் பருப்பு மாதிரி ஏன் வந்தீங்க? எனக்கு ஏன் கால் பண்ணவில்லை? என்று கேட்கிறார். உடனே ராஜூ ’பேலன்ஸ் இல்லை, பத்து பைசா கூட இல்லை என்று சொல்ல, பத்து பைசா கூட இல்லாத உன்னை நான் எப்படி காதலிப்பது என்பதோடு அந்த நாடக காதல் முடிவுக்கு வந்தது.