கதறி அழுத பவானியை ஒரே நிமிடத்தில் சிரிக்க வைத்த பிரியங்கா!

பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களில் ஒருவரான பிரியங்கா சக போட்டியாளர்களை மட்டுமின்றி பிக்பாஸஸையும் சேர்த்து கலாய்த்து வருகிறார் என்பதும் அவரது கலாய்ப்பு வேற லெவலில் உள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் பவானி ரெட்டி தனது சோகக் கதையை மதுமிதாவிடம் கூறி அழுது கொண்டிருந்த நிலையில் அங்கே வந்த பிரியங்கா ஒரே நிமிடத்தில் அவரை சிரிக்க வைத்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

தொலைக்காட்சி நடிகை பவானி ரெட்டி தன்னுடைய சோக கதையை மதுமிதாவின் கூறி அழுது கொண்டிருந்த நிலையில் அங்கே வந்த பிரியங்கா அவர் அழுது கொண்டிருப்பதை பார்த்ததும் அவரை இயல்பு நிலைக்கு கொண்டுவந்தார். ’பசிக்குதா? சாப்பிட ஏதாவது வேண்டுமா? என்று கேட்க அதற்கு பவானி ’எனக்கு ஆந்திரா சாப்பாடு வேண்டும்’ என்று கூறினார்

அதற்கு பிரியங்கா, ‘ இமான் அண்ணாச்சி காரமாக ஏதோ ஒன்று கேவலமாக செய்து வைத்துள்ளார். அதை எடுத்து நாக்கால் நக்கிப்பார். இனிமேல் ஆந்திர சாப்பாடு வேண்டாம் என்று சொல்லுவாய் என்று கூற உடனே பவானி ரெட்டி தன் கவலையை மறந்து சிரித்து விட்டார். இந்த இரண்டாவது புரமோவின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது