உன்கிட்ட ஒண்ணுமே இல்லை, ஸ்வாஹா: தாமரையை சீண்டிவிட்ட பிரியங்கா!

உங்ககிட்ட ஒண்ணுமே இல்ல, எங்க கிட்ட தான் எல்லாமே இருக்கு என தாமரையை பிரியங்கா சீண்டி விட்டதால் கொதித்தெழுந்த தாமரை பேசும் காட்சிகள் இன்றைய முதல் புரமோவில் உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக நகரத்தார் மற்றும் கிராமத்தார் டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த டாஸ்க்கில் நகரத்தார் நன்றாக விளையாடி ஸ்கோர் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் பிரியங்கா பேசியபோது, ‘இந்த சீசன் 5ல் நகரத்தார் அணி தான் நன்றாக விளையாடி வருகிறது. அதற்கு சாட்சியாக ஐந்து காயின்களும் எங்களிடம் தான் உள்ளது என நடுவர் இசைவாணியையும் சேர்த்து பிரியங்கா கூறுகிறார்.உடனே சூடான தாமரை, ‘உங்களிடம் 3 காயின்கள் தான் உள்ளது, ஏன் எல்லா காயினும் உள்ளது என்று பொய் சொல்கிறீர்கள் என்று கேட்கிறார்.

அதன்பின் ஸ்ருதி எழுந்து ஒரு எமோஷனல் பாண்ட்னா அதை வந்து மத்த டீம் வெளியில இருக்கும் போது காட்டணும் என்று கூற மீண்டும் சூடான தாமரை, ‘கமல் சார் அதை பத்தி பேசற வரைக்கும் பேசக்கூடாது என்று இருந்தேன் என்று சண்டைக்கு செல்கிறார். மொத்தத்தில் பிரியங்கா தாமரையை சீண்டிவிட்டு கொளுத்திப் போட அது நன்றாக வேலை செய்து தாமரையை ஆவேசப்படுத்தியுள்ளது என்பது இன்றைய முதல் புரமோவில் இருந்து தெரிய வருகிறது.

More News

பிறந்த நாள் அன்று ராகவா லாரன்ஸ் இந்திய அளவில் செய்த சாதனை!

நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது

95 நாட்களுக்கு பின் நடந்த அதிசயம்: யாஷிகாவின் வைரல் வீடியோ!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா ஆனந்த் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார் என்பதும் இந்த விபத்தில் அவருடைய நெருங்கிய தோழி

ரஜினிக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன? மருத்துவமனை வட்டாரங்களின் அதிர்ச்சி தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று இரவு சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு வழக்கமான

பர்த்தேட ஸ்பெஷல்… நடிகை அமலாபாலின் வேறலெவல் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை அமலாபால்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.