மாறி மாறி குறை சொல்லும் அபிஷேக், பிரியங்கா, நிரூப்: கூட்டணியில் திடீர் பிளவா? ஸ்ட்ராட்டஜியா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் ஒரு வாரம் 18 போட்டியாளர்களும் ஒற்றுமையாக இருந்த நிலையில் இரண்டாவது வாரமே அணி அணியாகப் பிரிந்து விளையாடி வருகின்றனர் என்பது தெரிந்ததே.
குறிப்பாக பிரியங்கா, நிரூப் மற்றும் அபிஷேக் ஆகிய மூவரும் ஒரு அணியில் இருந்து மற்ற அணியினருக்கு குடைச்சல் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீரென பிரியங்கா அணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக இன்றைய 2-வது புரமோ வீடியோவில் இருந்து தெரிய வருகிறது
இந்த புரமோவில் சுவாரசியமில்லாத போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த கேள்வியை பிக்பாஸ் எழுப்பியுள்ளார். இதனை அடுத்து ஒவ்வொருவரும் யார் சுவாரஸ்யமாக இல்லை என்பது குறித்து கூறுகின்றனர்
அதில் அபிஷேக் மற்றும் பிரியங்காவை நிரூப்பும், பிரியங்கா மற்றும் நிரூப்பை அபிஷேக்கும், அபிஷேக் மற்றும் நிரூப்பை பிரியங்காவும் மாறி மாறி கூறி வருவதை அடுத்து அந்த கூட்டணியில் பிளவு ஏற்பட்டு விட்டதாக தெரிகிறது
ஆனால் அதே நேரத்தில் தாங்கள் கூட்டணி இல்லை தனித்தனியாக விளையாடுகிறோம் என்பதற்காக செய்யும் ஸ்ட்ராட்டஜியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#Day19 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/87FKoUwZyW
— Vijay Television (@vijaytelevision) October 22, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout