நாமினேஷன் பட்டியலில் ப்ரியங்கா; ஆடிப்பாடு, கொளுத்தி போடு என கொண்டாட்டம்!
- IndiaGlitz, [Monday,October 11 2021]
பிக்பாஸ் வீட்டில் இன்று முதல் நாமினேஷன் பிராச்ஸ் நடந்தது என்பதும் அதில் இசைவாணியை டார்கெட் செய்து ஒரு சிலர் நாமினேட் செய்து வந்தனர் என்பதையும் முதல் புரமோவில் பார்த்தோம்
இந்த நிலையில் சற்று முன் வெளியாகி உள்ள இரண்டாவது புரமோவில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் உள்ளவர்கள் குறித்து பிக்பாஸ் அறிவித்துள்ளார். இந்த வாரம் இந்த பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற நாமினேஷனுக்கு தேர்வான நபர்கள் நாதியா, நிரூப், இமான், இசைவாணி, பிரியங்கா, அபினய், அபிஷேக். அக்ஷரா ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்
இதையடுத்து நாதியா, ‘வச்சு செஞ்சிட்டிங்களே, நாமினேஷன்ல்ல என் பெயர் தான் ஃபர்ஸ்ட் என்று கூறினார். இதனை அடுத்து பிரியங்கா ’ஆடிப்பாடு, கொளுத்தி போடு என்று கொண்டாட்டத்துடன் கூறுவதுடன் இன்றைய இரண்டாவது புரமோ முடிவடைந்ததுள்ளது. மேற்கண்ட எட்டு பேர்களில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#Day8 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/r1sMjlFMOQ
— Vijay Television (@vijaytelevision) October 11, 2021