பிரியங்கா வெளியே வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? சகோதரரின் பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரியங்கா ஆரம்பத்தில் சூப்பராக விளையாடினார் என்பதும் பிக்பாஸையே சகட்டுமேனிக்கு கலாய்த்து அவர் விளையாடிய விதம் அனைவருக்கும் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நாமினேசனில் பிரியங்கா இருந்தாலும் அவருக்கு மிக அதிகமான வாக்குகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பிரியங்கா மீது பிக்பாஸ் ரசிகர்கள் அதிருப்தி அடைந்ததாக தெரிகிறது. குறிப்பாக நிருப் மற்றும் அபிஷேக் இவர்களுடன் கூட்டணியாக இணைந்து மற்ற போட்டியாளர்களை கார்னர் செய்வது, குறிப்பாக அக்ஷராவை கார்னர் செய்வது என ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசனும் நேற்றைய எபிசோடில் பிரியங்காவை கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டு அவரை நிலைகுலையச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரியங்காவின் சகோதரர் சமூக வலைதளத்தில் செய்துள்ள பதிவில், ‘பிரியங்கா மீது ஏன் இவ்வளவு வெறுப்புகள். இது வெறும் கேம்ஷோ தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா உங்களை கண்டிப்பாக ஏமாற்ற மாட்டார். அவருக்கு உண்மையான ரசிகர்கள் இருப்பது பெருமை தான். வேறு எதுவும் நான் சொல்வதற்கு இல்லை. நிகழ்ச்சியை பார்த்து என்ஜாய் செய்யுங்கள். அவள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினால் கண்டிப்பாக வெளியே வந்தும் உங்களை பல மடங்கு எண்டர்டெயின்மெண்ட் செய்வார் என்பதை உறுதியாக கூறுகிறேன் என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.