'வாயை மூடு': பிரியங்காவிடம் மீண்டும் மோதும் தாமரை!
- IndiaGlitz, [Tuesday,December 14 2021]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று நடைபெற்றுவரும் பஸ் டாஸ்க்கில் போட்டியாளர்கள் தீவிரமாக விளையாடி வருகிறார்கள் என்பதை முதல் புரமோவில் பார்த்தோம். இந்த நிலையில் இந்த டாஸ்க் குறித்த இரண்டாவது புரமோவில் பிரியங்கா மற்றும் தாமரை ஆகிய இருவரும் மீண்டும் மோதும் காட்சிகள் உள்ளன.
கடந்த வாரம் பிரியங்கா மற்றும் தாமரை மோதிய காட்சிகள் விறுவிறுப்பாக இருந்தது என்பதும் இந்த சண்டையை கமல்ஹாசன் ஒரு வழியாக தீர்த்து வைத்தார் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் தற்போது மீண்டும் தாமரை மற்றும் பிரியங்கா மோதும் காட்சிகள் உள்ளன.
’யாருக்கும் அநியாயம் நடந்தாலும் தட்டிக்கேட்பேன்’ என்று பிரியங்கா கூற, ஒரு கட்டத்தில் தாமரை ’வாயை மூடு’ என்று கூற பிரியங்கா அதிர்ச்சி அடைந்ததோடு இன்றைய 2-வது புரமோ முடிவடைந்து உள்ளது என்பது குறிபிடத்தக்கது.
இந்த பஸ் டாஸ்க்கில், பஸ்ஸிலிருந்து வெளியேறுபவர்கள் இருந்து விலக்கப்படுவார்கள் என்று பிக்பாஸ் அறிவித்திருந்த நிலையில் ஏற்கனவே 5 பேர் வெளியேறிவிட்டதாக தெரிகிறது. இன்றைய இரண்டாவது புரமோவில் பேருந்துக்குள் பிரியங்கா, தாமரை, நிரூப் உள்பட 6 பேர்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Day72 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/oHVCK4mc7B
— Vijay Television (@vijaytelevision) December 14, 2021