உன் வாயில என்ன ஃபீடிங் பாட்டில் வச்சிருந்தாங்களா? நிரூப்பை வச்சு செய்யும் பிரியங்கா!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்து நேற்று வரை நெருக்கமாக இருந்த பிரியங்கா மற்றும் நிரூப் ஆகிய இருவரும் இன்று திடீரென கருத்து வேறுபாடு காரணமாக மோதிக் கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை வெளியான முதல் புரோமோ வீடியோவில் நிரூப் ஆவேசமாக பிரியங்காவிடம் சண்டை போட்ட நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் சண்டை தொடர்கிறது.
நிரூப் பேச்சு குறித்து அபிஷேக்கிடம் பிரியங்கா கூறியபோது, ‘என்னடா பேசுகிறான் அவன்’ என்று கூற அதற்கு அபிஷேக், ‘நீதாண்டி அவனுக்கு பில்டப் கொடுத்து, அவனை பாதுகாத்து, அடைகாத்து ஒரு கூன்டில் கொண்டுபோய் வைத்தாய் என்றும், ஒருத்தன் தப்பு பண்ணினால் சொல்லிக் கொடுக்கலாம், ஆனால் சீப்பாக பிஹேவ் பண்ண்இனால் சொல்லிக் கொடுக்க முடியாது’ என்று கூறுகிறார்.
இந்த நிலையில் அங்கு வரும் நிரூப், ‘நீங்களே ஒரு முடிவு பண்ணி விட்டு எல்லாவற்றையும் பண்ணி கொண்டு விடுவீர்கள், கிழித்துவிடுவீர்கள் என்று கூற அப்போது பிரியங்கா, ‘உன் வாயில என்ன ஃபீடிங் பாட்டிலா வைத்து இருந்தார்கள். நான் சனிக்கிழமை குறும்படத்திற்கு வெயிட் பண்ணிக்கொண்டு இருக்கிறேன். வெளியே போ என்று சொன்னால் நான் கிளம்பி போய் விடுவேன்’ என்று கூறும் காட்சிகளுடன் இன்றைய புரோமோ வீடியோ முடிவுக்கு வருகிறது.
மொத்தத்தில் இந்த வாரம் பிரியங்காவின் குறும்படத்தை கமல்ஹாசன் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Day61 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/pL5jIiGRoD
— Vijay Television (@vijaytelevision) December 3, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com