நீ பிரச்சனையை கிளப்புறதுக்குன்னே இருக்கியா? பிரியங்காவிடம் ஆவேசமாக மோதும் இமான்!
- IndiaGlitz, [Monday,November 01 2021]
நீ பிரச்சினையை கிளப்ப வேண்டும் என்று முடிவு செய்து விட்டாயா என பிரியங்காவிடம் இமான் அண்ணாச்சி ஆவேசமாக பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நீ எதுக்குடா உள்ள போன என்று பேசக்கூடாது என்றும் எனக்கு பிரியங்கா மீது சின்ன வருத்தம் என்றும் இமான் அண்ணாச்சி கூறுகிறார், இதுகுறித்து சிபி அவரிடம் விளக்கம் கூற முயற்சிக்கும் போது அதில் என்ன தவறு என்று பிரியங்காவும் கேள்வி எழுப்புகிறார்
அப்போது நான் தெரிந்தோ தெரியாமலோ உள்ளே போய்விட்டேன், அதனை ஏன் ரூல்ஸ் பிரேக் என்று எடுக்கிறீர்கள் என்று இமான் அண்ணாச்சி கேட்க, அது ரூல்ஸ் பிரேக் தான் என்று ப்ரியங்கா சற்று கோபமாக தெரிவிக்கின்றார்
இப்படிப் பேசுவது ஏன் என்று எனக்கு புரியவில்லை. நீ ஏதாவது பிரச்சனை கிளப்பி விட வேண்டும் என்றே இருக்கிறாயா என்று எனக்கு புரியவில்லை என்று இமான் அண்ணாச்சி கூறுகிறார்.
இன்றைய முதல் புரமோவில் பிரியங்கா கூட்டணியில் உள்ள நிரூப், அக்சராவை கோபத்தை கிளப்பும் வகையில் நடந்து கொள்ள, தற்போது பிரியங்காவே நேரடியாக களத்தில் இறங்கி இமானுடன் மோதுகிறார். மொத்தத்தில் இன்று நல்ல எண்டர்டெயின்மெண்ட் இருக்குது என்பது மட்டும் உறுதியாகிறது.
#Day29 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/VrQ2tji74h
— Vijay Television (@vijaytelevision) November 1, 2021