மன்னிப்பு கேட்க முடியாது: ஹெட்மாஸ்டர் சிபியிடம் மோதிய பிரியங்கா!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாகவே பிரியங்கா சக போட்டியாளர்களிடம் கருத்து வேறுபாடுடன் வாக்குவாதம் செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். முதலில் ராஜு, அதன் பின் தாமரை, தற்போது சிபியுடன் மோதும் காட்சிகள் உள்ளன.
பிக்பாஸ் வீட்டில் தற்போது ’கனா காணும் காலங்கள்’ என்ற பள்ளிக்கூட டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இதில் ஒருசில போட்டியாளர்கள் பள்ளி மாணவ மாணவிகளாகவும், ஒரு சில போட்டியாளர்கள் ஆசிரியராகவும் நடித்து வருகின்றனர். சிபி இந்த டாஸ்க்கில் ஹெட்மாஸ்டர் ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரியங்கா உள்ளே வர வேண்டுமானால் மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டும் என சிபி கூற, அதற்கு மன்னிப்பு கடிதம் எழுதி தர முடியாது என்று பிரியங்கா கூறும் காட்சிகள் இன்றைய அடுத்த புரமோவில் உள்ளன. மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விடுங்கள் என அபிஷேக், வருண் உள்பட பலர் கூறினாலும் மன்னிப்பு கடிதம் எழுதி தர முடியாது என்பதில் பிடிவாதமாக பிரியங்கா உள்ளார்.
மன்னிப்பு கடிதம் எழுதி தரும் அளவுக்கு நான் ஒன்றும் தப்பு பண்ணவே இல்லை என்றும், எதற்காக இவ்வளவு பெரிய தண்டனை என்றும் ஒரு விஷயத்தை தட்டித்தான் கேட்க வேண்டும் என்றால் அது தப்பே இல்லை என்றும் பிரியங்கா வாதாடும் காட்சிகளும் இன்றைய புரமோவில் உள்ளன. மொத்தத்தில் சிபி உடன் பிரியப்ங்கா மோதும் காட்சிகள் இன்றைய நிகழ்ச்சியில் ஹைலைட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Day51 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/qe6zUJBCSF
— Vijay Television (@vijaytelevision) November 23, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com